யோவ் லோகேஷ் சைலண்டா வேலைய பாக்குற பாத்தியா.! 10 படம் மட்டும் தான் இயக்குவேன்.. மேட்டர் இது தானா…

lokesh production : தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டட் இயக்குனர் என்ற அந்தஸ்தில் இருப்பவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இவர் இயக்கத்தில் வெளியாகிய மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என 5 திரைப்படங்கள் மெகா ஹிட் திரைப்படங்களாக அமைந்தது. அதேபோல் மிகக்குறுகிய காலகட்டத்தில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் அது மட்டும் இல்லாமல் ஒரு புதிய பாதையை உருவாக்கிக் கொண்டார்.

லோகேஷ் கனகராஜ் அவர்கள் கைதி விக்ரம் லியோ ஆகிய திரைப்படங்களை எல் சி யு  லோகேஷ் சினிமேட்டிக்  யுனிவர்ஸ் என்ற கான்செப்ட்க்குள் கொண்டுவந்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இந்த நிலையில் லியோ திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து தலைவர் 171 வது திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.

இந்த திரைப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் தொடங்க இருக்கிறது. மேலும் லோகேஷ் கனகராஜ் அவர்கள் சினிமாவில் பத்து திரைப்படங்களை மட்டுமே இயக்குவேன் என வாக்குறுதி கொடுத்துள்ளார் இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் அவர்கள் தற்போது தயாரிப்பாளராக களத்தில் இறங்க இருக்கிறார். இதனை தன்னுடைய சமூக வலைதள பக்கம் எக்ஸ் இணையதளத்தில் ஐந்து திரைப்படங்களை இயக்கிய பிறகு g squad என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் முதல் கட்டமாக நெருங்கிய நண்பர்கள் மற்றும் உதவியாளர்களின் திரைப்படங்களை தயாரிக்க இருக்கிறோம் எனவும் கூறியுள்ளார்கள். மேலும் இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எனக்கு எப்படி ஆதரவு கொடுத்தீர்களோ அதே போல் அவர்களுக்கும் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என அந்த பதிவில் வெளியிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் பதிவிட்ட தயாரிப்பு நிறுவன லோகோவை பார்த்த ரசிகர்கள் தேள் கொடுக்கு சிங்கத்தை சீண்டாதப்பா என்ற கேப்டனை போட்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் தேள் கொடுக்கு லோகோவை பார்த்த ரசிகர்கள் விக்ரம் திரைப்படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் இடம் பெற்றுள்ள டாட்டூ போலவே இருக்கிறது எனவும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.