புத்தாண்டில் புதிய திரைப்படங்களை வெளியிட்டு டிஆர்பி-யில் மாஸ் காட்டப் போகும் தொலைக்காட்சிகள்.. எந்த டிவியில் என்ன படம் தெரியுமா?

Tamil Movies: எந்த பண்டிகை வந்தாலும் அன்று திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீஸாவது வழக்கம் ஏனென்றால் விடுமுறை நாட்கள் என்பதால் குடும்பத்தினர்களுடன் ரசிகர்கள் திரைப்படங்களை தியேட்டருக்கு சென்று பார்ப்பார்கள். இதன் மூலம் வசூல் ரீதியாக படங்கள் வெற்றியை காண முடியும் இவ்வாறு அதே போல் வீட்டிலேயே இருந்தபடி குடும்பத்துடன் படங்களை பார்த்தும் வருகின்றனர்.

இதன் காரணமாக சேனல்களும் போட்டி போட்டுக் கொண்டு புதிய திரைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அப்படி இந்த ஆண்டு புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சன் டிவி, விஜய் டிவி, கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் மற்றும் கலைஞர் டிவி போன்ற புதிய திரைப்படங்களை வெளியிட தயாராகியுள்ளது. இவ்வாறு எந்தெந்த தொலைக்காட்சியில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாகிறது என்பது குறித்த தகவலை பார்க்கலாம்.

விஜயகாந்த் அடக்கம் செய்த சந்தன பேழை எவ்வளவு தெரியுமா.? எம் ஜி ஆர் க்கு செய்தவர் தான் இதையும் செய்தாரா.?

விஜய் டிவி: புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு இன்று துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த கிங் ஆப் கோதா படம் மதியம் 3:00 மணிக்கு ரிலீஸ் ஆகிறது இதனை அடுத்து நாளை காலை 10 மணி அளவில் சந்தானம் நடிப்பில் வெளிவந்த கிக் படமும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

சன் டிவி: சன் டிவியில் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு நாளை காலை 10 மணிக்கு சூர்யா, அனுஷ்கா நடித்த சிங்கம் இதனை அடுத்து 3 மணி அளவில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாசு மற்றும் மாலை 6:30 மணிக்கு ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி 2 உள்ளிட்ட படங்கள் ஒளிபரப்பாக உள்ளது.

கலைஞர் டிவி: விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த கட்டாக் குஸ்தி காலை 10 மணிக்கு 3 மணிக்கு பீட்சா 3 படமும் வெளியாகிறது.

சென்னை மாயாஜாலில் நான்காவது இடத்தில் விஜய்.. ரஜினிக்கும் அஜித்துக்கும் எந்த இடம் தெரியுமா.? இதோ டாப் டென் லிஸ்ட்..

கலர்ஸ் டிவி: நிவேதா பெத்துராஜ், ரகுல் ப்ரீத் சிங், மேகா ஆகாஷ் இணைந்து நடித்த boo படம் இன்று புத்தாண்டு பண்டிகை முன்னிட்டு ஒளிபரப்பாகிறது.

ஜீ தமிழ்: காஜல் அகர்வால், யோகி பாபு இணைந்து நடித்த கோஷ்டி, சந்தானத்தின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான டிடி ரிட்டன்ஸ் ஆகிய திரைப்படங்களும் இன்று ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ளது.