பொதுவாக சினிமாவை பொருத்தவரை எந்த நடிகர்களாக இருந்தாலும் நடிகைகளாக இருந்தாலும் சிறு தவறு செய்தால் கூட சினிமாவில் இவர்களுக்கு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அமையாது எனவே பார்த்து சூதானமாக இருப்பது மிகவும் அவசியம். இப்படிப்பட்ட நிலையில் பிரபல காமெடி நடிகர் ஒருவர் அரசியலில் ஆர்வம் வந்ததால் சினிமாவை விட்டு விலகினார்.
எனவே தற்பொழுது பரிதாப நிலையில் இருப்பதாக கூறியுள்ளார் அது குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராகவும், வில்லனாகவும் நடித்து வந்தவர் தான் நடிகர் தியாகு. இவர் நகைச்சுவை, வில்லன் போன்றவற்றை தொடர்ந்து ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் ஒரு தலை ராகம் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான இவர் இதனை அடுத்த நடிகர் வடிவேலுவுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு சினிமாவை விட்டு விலகிய இவர் திமுக கட்சியில் பல ஆண்டுகளாக பணியாற்றிய வந்தார் மேலும் தற்பொழுது விலகியுள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவருக்கு 65 வயதாகும் நிலையில் சமீபத்தில் பேட்டியில் கலந்துக் கொண்ட இவர் ஏராளமான தகவல்களை வெளிப்படையாக பேசி உள்ளார். அதில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். எம்ஜிஆர் படாத பாடு படியுள்ளார் கலைஞர் மிகப்பெரிய நடிகர் என்பதனால் எம்ஜிஆர் தப்பிவிட்டார் ஆனால் நான் எஸ்.ஏ சந்திரசேகர், ராதாரவி போன்றவர்கள் எல்லாம் நாசமாகி விட்டோம்.
மேலும் நான் அவரை நம்பி விழா ஒன்று நடத்தினேன் ஆனால் விஜயகாந்த் மண்டபம் போச்சு எனக்கு பாரம்பரிய சொத்து போச்சு என அவர் வெளிப்படையாக கூறியுள்ளார். எனக்கு சினிமா தான் சோறு போட்டுச்சு தவிர அரசியல் எனக்கு எதுவும் செய்யவில்லை இன்று நான் ஒரு பரிதாப நிலையில்தான் இருக்கிறேன் என கூறியிருக்கும் தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
"விஜயகாந்துக்கு மண்டபம் போச்சு.. எனக்கு சொத்து போச்சு" நடிகர் தியாகு பரபரப்பு பேட்டி😒😮😳 pic.twitter.com/D4eNeJE0VX
— .P.BALASUBRAMANIAM🚗 (😜)Professional Ethics (@balup13248255) July 5, 2023