don-1

டான் திரைப்படத்தை பார்த்துவிட்டு கண்கலங்கிய பிக்பாஸ் பிரபலம்.! வைரலாகும் வீடியோ..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் தொடர்ந்து தரமான கதாபாத்திரம் உள்ள திரைப்படங்களில் நடித்து சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகிறார். அந்தவகையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் தற்போதைய டான் திரைப்படம் வெளிவந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பு பெற்று வருகிறது.

இத்திரைப்படம் அதிசயமாக இருக்கிறது என கண்கலங்க வைக்கும் அளவிற்கு சென்டிமென்ட் இருக்கிறது என பலரும் கூறி வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலம் ஒருவர் திரைப்படத்தை பார்த்துவிட்டு கண்கலங்கி தியேட்டரில் இருந்து வெளியே வந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று பிறகு இதன் மூலம் தொகுப்பாளராக பணியாற்றிய ஆரம்பித்தார். இப்படிப்பட்ட நிலையில் இவருக்கு ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நிறைந்த திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வந்த இவர் தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருகிறார். நடிகர் மட்டுமல்லாமல் இசை அமைப்பதிலும் ஆர்வம் உடையவராக திகழ்கிறார்.  எனவே தற்போது இவர் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் டான் திரைப்படம் வெளியான அன்றே பல தியேட்டர்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது அதில் ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடி திரைப்படத்தினை பார்த்தார்.

இந்நிலையில் தற்போது தான் திரைப்படத்தை பார்த்த பிக்பாஸ் புகழ் நடிகர் சரவணன் தியேட்டரில் கண்ணீர் விட்டு அழுது கொண்டே தியேட்டரில் இருந்து வெளியே வந்து காரில் அமர்ந்து கொண்டுதான் தான் திரைப்படம் பற்றி பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.