நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என பன்முக திறமைகளை கொண்டு தமிழ் திரைவுலகில் முன்னணி நடிகராக விளங்கிவரும் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தற்பொழுது ருத்ரன் திரைப்படம் உருவாகி வரும் நிலையில் இந்த படம் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி அன்று தமிழ் புத்தாண்டு தினத்தில் திரையரங்குகளில் ரிலீசாக இருக்கிறது.
இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்பொழுது போஸ்ட் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர்கள் தீவிரம் காண்பித்து வருகிறார்கள். மேலும் இதனை அடுத்து தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாக இருக்கும் நிலையில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இந்த படத்தின் டிரைலர் இரண்டு நிமிடங்களுக்கும் மேல் இருக்கும் நிலையில் ஆக்சன், கமர்சியல் என தேவையான அனைத்து அம்சங்களும் இருப்பது தெரிய வருகிறது. மேலும் இந்த படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இதனை அடுத்து சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் அவரது கெட்ட மற்றும் கேரக்டர் வித்தியாசமாக உள்ளது.
மேலும் இந்த படத்திற்கு பிரகாஷ் ராஜ் இசையமைத்திருக்கும் நிலையில் தயாரிப்பாளர் கதிர்ரேசன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் கண்டிப்பாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வெற்றியை பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை அடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு ஆர் டி ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய அந்தோணி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டு உள்ளார். இதோ ராகவா லாரன்ஸின் ருத்ரன் பட டிரைலர்.