தனது காதலருடன் ரொமான்ஸ் செய்யும் பிரியா பவானி சங்கர்.! வைரலாகும் கியூட் புகைப்படங்கள்..

Priya Bhavani Shankar: நடிகை பிரியா பவானி சங்கர் நீண்ட வருடங்களாக தொழிலதிபர் ஒருவரை காதலித்து வருவது நாம் அனைவருக்கும் தெரிந்து ஒன்றுதான். அப்படி சமீப காலங்களாக தனது காதலருடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் பிரியா பவானி சங்கர் தொடர்ந்து தனது க்யூட்டான, ஹாட்டான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அப்படி தற்பொழுது தனது காதலருடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் 7 புகழ் விசித்ராவிற்கு நடந்த கொடுமைகள்.. இதனால் தான் சினிமாவை விட்டு விலகினாரா.?

சின்னத்திரை மூலம் சினிமாவிற்கு அறிமுகமான ப்ரியா பவானி சங்கர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த சீரியலுக்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளைப் பெற்ற இவருக்கு ஆரம்ப காலகட்டத்தில் முன்னணி நடிகர்களின் படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்தது.

priya bhavani shankar
priya bhavani shankar

அப்படி தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் சரியாக நடித்து வந்த பிரியா பவானி சங்கர் தற்பொழுது ஹீரோயின் ஆக கலக்கி வருகிறார். தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவரும் நிலையில் இவருடைய நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, பொம்மை, யானை போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது.

priya bhavani shankar 1
priya bhavani shankar 1

இந்த வெற்றியின் மூலம் தெலுங்கிலும் கதாநாயகியாக நடித்த வருகிறார். பிரியா பவானி சங்கர் ராஜவேல் என்பவரை காதலித்து வருவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். இருவரும் இணைந்து ஹோட்டல் ஒன்றையும் நடத்தி வருகின்றனர். அப்படி தீபாவளி ஸ்பெஷல் ஆக தனது காதலுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். மேலும் தனது தோழியின் திருமணத்திலும் இருவரும் ஒன்றாக கலந்து கொண்ட நிலையில் இவர்களுடைய க்யூட்டான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.