தொகுப்பாளராக சின்னத்திரையின் தனது வாழ்க்கையை ஆரம்பித்து பிறகு வெள்ளித்திரையில் பிரபலமடைந்து வரும் ஏராளமான நடிகர் நடிகைகள் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் மிகவும் முக்கியமான ஒரு நடிகர்தான் RJ பாலாஜி. இவர் பிரபல Radio தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.
அதன் பிறகு சினிமாவில் காமெடி நடிகராக நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்திற்குப் பிறகு ஹீரோவாகவும், இயக்குனராகவும் வளர்ந்தார். முக்கியமாக நானும் ரவுடிதான் LKG திரைப்படத்தில் ஹீரோவாக இவரின் கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது.
இந்த திரைப்படத்தினை தொடர்ந்து RJ பாலாஜி நயன்தாராவுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தினால் திரையரங்குகள் மூடியிருந்த நிலையில் நேரடியாக ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது.
மேலும் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை RJ பாலாஜி தான் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் நடித்துவரும் அடுத்த திரைப்படமான வீட்ல விசேஷம் திரைப்படத்தினை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனிகபூர் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் RJ பாலாஜி மற்றும் NJ சரவணன் நினைந்து இத்திரைப்படத்தினை இயக்கியுள்ளனர்.
இத்திரைப்படம் ஹிந்தி திரைப்படமான பதாய் ஹோ என்ற திரைப்படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. இத்திரைப்படத்தில் அபர்ணா முரளி ஹீரோயினாக நடித்துள்ளார். இவர்களைத் தொடர்ந்து சத்யராஜ்,ஊர்வசி, மறைந்த நடிகை KPAC லலிதா உள்ளிட்டவர்கள் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இத்திரைப்படம் வருகின்ற ஜூன் 17ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிவுள்ளது. மேலும் சமீபத்தில் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது தற்போது இப்படத்தின் பிரமோஷனுக்காக ஜீ தமிழ் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்து வரும் புது புது அர்த்தங்கள் தொடரில் ஸ்பெஷல் என்ட்ரியாக வந்துள்ளார். தற்போது அந்த ப்ரோமோவை ஜீதமிழ் வெளியிட்டுள்ளது.
https://youtu.be/QIlhaiNHLS4