rithika

எப்பாடா தாலி கட்டியாச்சு தாலி கட்டியாச்சு என சந்தோஷத்தின் உச்சத்தில் ரித்திகா.!

சமீப காலங்களாக சின்னத்திரை நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள அவர்தான் நடிகை ரித்திகா இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார் இந்த சீரியலில் ஹீரோவின் தங்கையாக நடித்திருந்தார்.

இந்த சீரியலில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை கிடைத்தது இருந்தாலும் பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்தது எனவே வாய்ப்பைத் தேடி அலைந்து வந்த இவருக்கு மீண்டும் விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பை கொடுத்தது இந்த சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இதனைத் தொடர்ந்து இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். அந்த வகையில் நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் சமையல்லும் எனக்கு தெரியும் என குக் வித் கோமாளி சீசன் 2வில் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார். இந்நிலையில் ரித்திகாவிற்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. அதாவது விஜய் டிவியில் வேலை செய்து வந்த வினு என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

திடீரென்று யாரிடமும் சொல்லாமல் தன்னுடைய குடும்பத்தினர்கள் முன்னிலையில் மிகவும் சிம்பிளாக திருமணம் செய்து கொண்டார் எனவே புகைப்படங்கள் மட்டுமே வெளியாகி இருந்தது இப்படிப்பட்ட நிலையில் சென்னை வந்த இவர் தன்னுடைய நண்பர்கள் பலரையும் அழைத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தி இருந்தார்.

எனவே இந்நிகழ்ச்சியில் புகழ், பாலா, பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட இவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறியிருந்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ரித்திகா தன்னுடைய திருமண வீடியோவை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.