விஜய் டிவியில் வெளியாகும் நாடகங்களில் ஒன்றான பாக்கியலட்சுமி நாடகம் தனிச் சிறப்பு வாய்ந்தது. இந்த நாடகம் பல நல்ல விஷயங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லக் கூடியது அதில் ஒன்றுதான் விதவைகளின் மறுமணம். இந்த நாடகத்தில் அமிர்தா என்னும் வேடத்தில் நடிக்கும் நடிகை ரித்திகா இந்த நாடகத்தில் ஒரு விதவையாக நடிக்கின்றார் இதில் அவருக்கு ஒரு குழந்தையும் உண்டு
அக்குழந்தையின் பெயர் நிலா. ரித்திகா இந்த நாடகத்தை தவிர்த்து விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் குக் வித் கோமாளி போன்ற பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று மக்களால் பெரிதும் அறியப்பட்டவர், மேலும் இவர் சில விருதுகளையும் பெற்றுள்ளார் ((she won fab stars, Best performer of the year 2021″ award, “Silent killer” award in Cooku with Comali””)).
நடிகை ரித்திகாவிர்க்கு தமிழ்நாட்டில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது, இவர் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார். இந்நிலையில் தான் பாக்கியலட்சுமி நாடக ஷூட்டிங்கில், பாக்கியலட்சுமி நாடகத்தில் அமிர்தாவினுடைய குழந்தையின் சிறு குறும்புகள் வீடியோ பதிவு செய்யப்பட்டது.
இந்த வீடியோதான் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.யாரும் இல்லாத அறையில் நடந்து வரும் நிலா பாப்பா ரித்திகாவை பார்த்து அம்மா என்று கூப்பிட, “ஒன்மோர் ஒன்மோர் போகனும் தெரியுமா” என்று சிரித்துக்கொண்டே ரித்திகா குழந்தையிடம் பேசுகிறார்.
அந்த நேரத்தில் அங்கு இருந்தவர்களிடம் நான் வர சொல்லவில்லை அவளாகத்தான் வந்தாள் என்று ரித்திகா சிரித்துக்கொண்டே கூறுகிறார். இந்த வீடியோவானது ரசிகர்களிடையே உற்சாகத்தையும்,ரசிகர்களால் இணையதளங்களில் மேலும் பகிரப்பட்டு வருகிறது.