biggboss

பிகினியில் குளிக்கும் வீடியோவை வெளியிட்ட பிக்பாஸ் ரைசா.! இணையதளத்தில் தீயாய் பரவும் வீடியோ.

இந்திய மாடல் அழகியாக வலம் வந்தவர் பிக்பாஸ் ரைசா இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார். அதன்பிறகு பிக்பாஸ் சீசனில் நடித்ததால் இவருக்கு பட வாய்ப்பு குவிந்தது.

தமிழில் முதன்முதலாக பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் தான் நடித்த முதல் திரைப்படத்திலேயே இவருக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தது அதுமட்டுமில்லாமல் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டார்.

இவர் ஹீரோயினாக நடிப்பதற்கு முன்பு வேலையில்லா பட்டதாரி இரண்டாவது பாகத்தில் வசுந்தரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த கதாபாத்திரத்தில் நடித்ததால் ரசிகர்களுக்கு முகம் தெரியும் நடிகையாக வலம் வந்தார்.  மேலும் பாலா இயக்கத்தில் வெளியாகிய வர்மா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

raiza
raiza

தற்பொழுது இவர் ஆலிஸ், காதலிக்க யாருமில்லை, எப்ஐஆர், ஹேஸ் டாக் லவ் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத் தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ரைசா அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

raizawilson-tamil360newz

டிக் டாக்கில் அசத்தும் பிக்பாஸ் பிரபலம் வைரலாகும் வீடியோ!!

bigboss actress tiktok video: ரைசா வில்சன் விஜய் டிவி தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1னில் கலந்து கொண்டு பிரபலமானார். இவர் ஒரு மாடலிங் அழகி மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் இதற்கு முன் சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து பியார் பிரேமா காதல், தனுசு ராசி நேயர்களே போன்ற திரைப்படங்களில்  ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து தற்போது காதலிக்க யாருமில்லை, ஆலிஸ், #love, எஃப்ஐஆர் போன்ற திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் வீட்டிலேயே உள்ள நடிகர், நடிகைகள் அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்தவகையில் நடிகை ரைசா வில்சனும் தனது சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் இவர் ரசிகர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.

மேலும் இவர் தற்போது டிக்டாக்கில் ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் என்ற பாடலுக்கு டிக் டாக் செய்து வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.