paava kadhaigal

பல பிரமாண்ட இயக்குனர்கள் இணைந்து உருவாக்கிய பாவக்கதைகள் டீசர் இதோ..! ஆகா டீசரே சும்மா அள்ளுதே..!

paava kadhaigal teasar: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர்கள் தான் கௌதம் வாசுதேவன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், வெற்றிமாறன் ஆகியோர்கள் அவர்கள். இவர்கள் பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியது மட்டுமல்லாமல் பல விருதுகளையும் பெற்றுள்ளார்கள்.

இவ்வாறு பெயர் போன இந்த இயக்குனர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பாவகதைகள் எனும் திரைப்படத்தை இயக்கிய உள்ளார்கள் இந்த திரைப்படம் வருகின்ற டிசம்பர் மாதம் 18ஆம் தேதி வெளியிடப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இவ்வாறு பிரமாண்டமாக உருவாகும் இந்த திரைப்படத்தை இந்தியா மட்டுமல்லாமல் மொத்தம் 193 நாடுகளில் வெளியிடப் போவதாக உள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் பிரபல நடிகை அஞ்சலி, பவானி, கௌதம் வாசுதேவ், சிம்ரன், சாய்பல்லவி, பிரகாஷ்ராஜ், சாந்தனு போன்ற முக்கிய பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்து உள்ளார்கள்.

இவ்வாறு மிகப்பெரிய முதலிட்டில் உருவாகிய இந்த திரைப்படத்தை ஆர் எஸ் வி பி மூவிஸ் என்ற நிறுவனம் மற்றும் பிளையிங் யூனிகான் ஆகிய இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து தயாரித்து உள்ளதாம்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். பொதுவாக வெற்றிமாறன் எடுக்கும் திரைப்படங்கள் அனைத்துமே ஒரு முக்கிய கதை அம்சத்தை கொண்டதாக இருக்கும் அந்த வகையில் இந்த திரைப்படமும் ஆணவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்கள்.