தற்போது உள்ள தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது முன்னணி வகிக்கும் தொலைக்காட்சி விஜய் டிவி.
விஜய் டிவியில் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர்.
இந்த சீரியல் நன்றாக ஓடிக்கொண்டு இருந்த நிலையில் கொரோனா பிரச்சினையின் காரணமாக நிறுத்தப்பட்டது. பிறகு முற்றிலும் கதை வேறுபாடுவுடன் புதிய நடிகர், நடிகைகளுடன் நாம் இருவர் நமக்கு இருவர் சீசன்2 தொடங்கியது.
இந்நிலையில் தற்போது சீசன் ஒன்றில் நடித்து வந்த நடிகை ரேஷ்மி நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2வில் மீண்டும் நடிக்க உள்ளாராம்.
இந்த தகவலை நடிகர் செந்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.