மகாவை கொலை செய்ய முடிவெடுத்த முத்துராசு.! வெளிவந்த இன்றைய ப்ரோமோ.

0
naam-iruvar-namaku-iruvar-2
naam-iruvar-namaku-iruvar-2

பொதுவாக ஒரு சில சீரியல்கள் மட்டும் அமோக வெற்றியை பெற்று விடும் அப்படிப்பட்ட சீயல்கள் முடிந்து சில ஆண்டுகள் ஆனாலும் கூட அதனை மறக்க முடியாது அந்த வகையில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து முடியும் வரையிலும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று சின்னத்திரையில் ஒரு சரித்திரத்தை படைத்த சீரியல் தான் சரவணன் மீனாட்சி.

இந்த சீரியலின் வெற்றிக்குப் பிறகு தற்பொழுது அதே அளவிற்கு வெற்றி பெற்றுள்ள சீரியல் தான் நாம் இருவர் நமக்கு இருவர்.  சீரியலின் முதல்பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்த நிலையில் கொரோனா பிரச்சினையின் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது இரண்டாவது சீசன் அறிமுகமாகும்போது கதை மாற்றத்துடன் சில புதிய கதாபாத்திரங்களும் அறிமுகமாகி இருந்தார்கள்.

இவ்வாறு இந்த சீரியலில் சமீப காலங்களாக ஏராளமான டுவிஸ்டுகள்  இருந்து வருகிறது.  இந்த சீரியல் 1040 எபிசோடுகளை தாண்டியும் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  இந்த சீரியல் விரைவில் முடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்த நிலையில் தற்பொழுத அதனை உறுதிப்படுத்தும் வகையில் சீரியல் குழுவினர்கள் கடைசியாக எடுத்துக்கொண்ட புகைப்படம் என்று கூறி கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்கள் அந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலானது.

தற்போதுதான் ஐஸ்வர்யாவை கார்த்திக்கின் அம்மா ஏற்றுக்கொண்டார். கிட்டதட்ட பல பிரச்சனைகளும் முடிந்து சரண்யா மற்றும் பாண்டியன் இருவரும் ஒன்று சேர்ந்து உள்ளார்கள். இவ்வாறு பல பிரச்சனைகள் முடிந்துள்ள நிலையில் தற்போது புதிதாக மகாவிற்கு பிரசவமாக இருக்கும் நிலையில் மாயன் மற்றும் மகா இருவரும் காரில் மருத்துவமனைக்கு செல்கிறார்கள் இதனை தெரிந்துகொண்ட முத்துராசு மற்றும் இவனின் மாமா மகாவை கொலை செய்ய முடிவெடுத்து உள்ளார்கள்.