நடிகை ரம்யா பாண்டியன் என்பவரை நாம் அனைவரும் அறிந்திருப்போம் இங்கு அவரைப் போலவே அவர் ஆடிய பாடலுக்கு நடனம் புரிய வேண்டும் என்று போட்டியாக பிக்பாஸ் பிரபலம் ஒருவர் நடனமாடிய வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
அவர் வேறு யாரும் இல்லை பிக்பாஸ் பிரபலமான ஜூலி, பிக்பாஸில் பங்கேற்ற பிறகு ஜூலிக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது,அதையடுத்து இவர் வெளியிடும் ஒவ்வொரு வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் பலதரப்பட்ட கமெண்ட்ஸ்களை பெற்று வருகிறது.
இப்படி இருக்க இந்த நிலையில்தான் ரியோ ராஜ் மற்றும் ரம்யா பாண்டியன் இணைந்து நடனமாடிய மியூசிக் வீடியோ “தோட்டா” என்னும் பாடலுக்கு ஜூலி நடனமாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த பாடல் பற்றி கூறிய ஜூலி, இந்த பாடல் எனக்கு பிடித்தமான பாடல்களில் ஒன்று என்று கூறியுள்ளார்,மேலும் இந்த பாடலில் நடனம் ஆடியதற்காக கிரேட் ஒர்க் பை (great work by) ரியோ ராஜ் மற்றும் ரம்யா பாண்டியன் என கேப்ஷனில் தெரிவித்துள்ளார்.
நடிகை ரம்யா பாண்டியன் அவ்வவ்போது போட்டோஷூட் செய்து மிக அழகான போட்டோக்களை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்கள் அனைவரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்கும்படி செய்வார், அதே போல் ஜூலியும் அவ்வப்போது செய்து வருகிறார்,
இதற்கு முன்பு பீச்சில் கருப்பு நிற உடையணிந்து படுத்துக்கொண்டு போட்டோஷூட் செய்து அந்த போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டார் ஜூலி இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ இதோ உங்களுக்காக.