இப்ப மட்டுமல்ல ஏழு வருடங்களுக்கு முன்பு ஜூலியும் சோம்சேகரும் நண்பர்களா.! வெளியானது புகைப்படம்

0
julee-and-som-sekar
julee-and-som-sekar

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பலரது வாழ்வில் விளக்கேற்றி உள்ளது என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் சினிமாவில் பிரபலம் அடைய முடியாமல் தனக்கென ஒரு அங்கீகாரம் கிடைக்காமல் தவித்து வந்த பலரும் தற்போது சினிமாவில் முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளாக பிரபலமடைந்துள்ளார்கள்.

அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 1 மூலம் அறிமுகமானவர் தான் ஜூலி. இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு ஒரு பேட்டியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார் பிறகு வீரத்தமிழச்சி என்று அனைவராலும் போற்றப்பட்டார்.

இவ்வாறு பிரபலமடைந்த இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரிடமும் அவ்வபெயர் தான் வாங்கிக் கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் பிறகு இவர் தொகுப்பாளராகவும் சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

ஜூலியை போலவே பிக்பாஸ் சீசன் 4-இன் மூலம் அறிமுகமானவர் சோம் சேகர்.  இவர் பல விளம்பரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிகழ்ச்சியின் மூலம் இவர் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

இந்நிலையில் சோம் சேகர் மற்றும் ஜூலி இருவரும் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்பொழுது ஜூலி தனது இன்ஸ்டாகிராமில் 7 வருட நண்பர்கள் என்று கூறி அவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

julee 3
julee 3

ஜூலியும் சோம் சேகரும் நண்பர்களா நம்பவே முடியவில்லை என்று ரசிகர்கள் பல கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.