பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று வரும் போட்டியாளரான ஜனனியின் சொந்த வீட்டின் புகைப்படம் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள் அதாவது பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக தொடங்கிய தற்பொழுது 50 நாளை கடந்துள்ளது.
அந்த வகையில் முந்தைய சீசன்களை விட இந்த சீசனில் 21 போட்டியாளர்களுடன் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட நிலையில் தற்போது 7 போட்டியாளர்கள் வெளியேறி 14 போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, செரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர்கள் இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளார்கள்.
இவ்வாறு மிகவும் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் ஏராளமான டாஸ்க் நடைபெற்று வருகிறது இதனால் போட்டியாளர்கள் கிடையே சண்டை சச்சரவுகளும் இருந்து வரும் நிலையில் கமலஹாசன் வாரம் தோறும் அனைத்து போட்டியாளர்களையும் விளாசி வருகிறார். அந்த வகையில் கடந்து வாரம் 50 நாள் ஆகியும் அனைவரும் சேப் சூனில் இருக்கிறீர்கள் என கூறி இருந்தால் இதன் காரணமாக இரண்டாவது முறையாக ஓபன் நாமினேஷன் நடைபெற்றது அதில் பல போட்டியாளர்கள் வசமாக சிக்கி உள்ளார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் 21 போட்டியாளர்களில் ஒருவராக பங்கு பெற்று வருபவர் தான் ஜனனி இவர் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் செய்தி வாசிப்பாளராக இருந்து வரும் இவர் சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஒரு நோக்கத்துடன் இருந்து வருகிறார் இவர் நடிகை திரிஷாவின் தீவிர ரசிகை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இவர் பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் உணவு மற்றும் உடல் சார்ந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மற்றும் மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதன் காரணமாக இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது இவருடைய க்யூட்டான எக்ஸ்பிரஷன் தமிழ் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தது.
இப்படிப்பட்ட நிலையில் ஜனனி பற்றி பலருக்கும் தெரியாமல் இருந்து வந்த நிலையில் அவருடைய குடும்பம் பின்னணி பற்றி தற்பொழுது தெரியவந்துள்ளது இவருடைய நண்பர்கள் குடும்பம் குறித்து பெரிதாக எந்த ஒரு தகவலும் சோசியல் மீடியாவில் வெளியிடவில்லை. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது சொந்த வீடு குறித்த புகைப்படத்தை யூடியூபில் வெளியிட்டு உள்ளார்கள்.