vani-bhojan

நடிகர் ஜெய்யுடன் உச்சகட்ட லிப்லாக்கில் நடிகை வாணி போஜன்..! அம்மாடியோ இது என்ன அந்த மாதிரி வெப்சீரிஸ் போல இருக்கு..!

triples web serious trailer : தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பகவதி திரைப்படத்தின் மூலம் திரை உலகில் முகம் காட்டியவர் தான் நடிகர் ஜெய். அதன் பிறகு சென்னை 600028, சுப்பிரமணியபுரம்,  சரோஜா போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

இவ்வாறு படிப்படியாக சினிமாவிற்குள் நுழைந்த நடிகர் ஜெய் அதன்பிறகு கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.  அந்த வகையில் இவர் நடித்த எங்கேயும் எப்போதும் என்ற திரைப்படமானது ரசிகர்களால் இன்றும் மறக்க முடியாத ஒரு திரைப் படமாக அமைந்துவிட்டது.

இவ்வாறு பல திரைப்படங்களில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்திருந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற முடியவில்லை. இருந்தாலும் அதையெல்லாம் ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் சினிமாவில் அயராது பாடுபட்டு வருகிறார்.

நடிகர் ஜெய் திரைப்படம் என்றாலே பொதுவாக கோக்குமாக்கான வசனங்களும் அதிகப்படியான ரொமான்ஸ் காட்சிகளும் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும்.  அந்த வகையில் தற்போது நடிகர் ஜெய் வாணி போஜன் உடன் ட்ரிபிள்ஸ் எனும் வெப் சீரியஸில் நடித்து வருகிறார்கள்.

நடிகை வாணி போஜன் சின்னத்திரையில் பிரபல நடிகையாகவும் சின்னத்திரை நயன்தாராவாகவும் வலம் வந்தவர்.  மேலும் பல சீரியலில் கதாநாயகியாக நடித்து பல்வேறு ரசிகர் பெருமக்களை கவர்ந்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை வாணி போஜன் மற்றும் ஜெய் ஆகிய இருவரும் லிப் லாக் மற்றும் ரொமான்ஸில் இணையத்தையே அலற விடுமளவிற்கு ட்ரிபிள்ஸ் வெப் சீரியல் நடித்துள்ளார்கள் இந்த தொடரானது வருகின்ற டிசம்பர் 11ஆம் தேதி ஹாட்ஸ்டாரில்ல் வெளியாக உள்ளது.