coffee with kadhal

ஒரே பெண்ணை காதலிக்கும் ஜீவா, ஜெய் காபி வித் காதல் படத்தின் டிரைலர் இதோ.!

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சுந்தர் சி இவருடைய இயக்கத்தில் வெளிவந்த ஏராளமான திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவருடைய இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் காபி வித் காதல்.

இந்த படத்தில் மூன்று கதாநாயகர்கள் மற்றும் மூன்று கதாநாயகங்களை வைத்து உருவாகி உள்ளது. அந்த வகையில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோர்களாம் நடிகை மாளவிகா சர்மா, அமிர்தா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

மேலும் இவர்களை தொடர்ந்து யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா சண்முகம், திவ்யதர்ஷினி, அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து இந்த படத்தினை குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது பிறகு இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலான நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலரை பட குழுவினர்கள் வெளியிட்டார்கள். ஜீவா, ஜெய் இருவரும் ஒரே பெண்ணை காதலிப்பது போன்ற காண்பித்து உள்ளார்கள் வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இதோ அந்த ட்ரைலர்.