“காபி வித் காதல்” திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

தமிழ் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி பின் நடிகராக விஸ்வரூபம் எடுத்தவர் சுந்தர் சி.  இவர் இயக்குனராக இதுவரை அஜித், ரஜினி போன்ற டாப் ஹீரோக்களை வைத்து படங்களை இயக்கி வெற்றி கண்டவர் இருப்பினும் அண்மைக்காலமாக  இவர் எடுக்கும் திரைப்படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்ற ஒவ்வொரு படமும் சுமாரான வசூலை அள்ளுகிறது.

இதனால் இயக்குனர் சுந்தர் சி எடுக்கும் படங்களுக்கான வரவேற்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருக்கிறது இதை மாற்றி அமைக்க இயக்குனர் சுந்தர் சி காபி வித் காதல் என்னும் திரைப்படத்தை எடுத்தார் இந்த படம் நேற்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த திரைப்படம் மாளவிகா சர்மா,, திவ்யதர்ஷினி, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தாத்தா, சம்யுக்தா, ஸ்ரீகாந்த், மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். படம் வெளிவந்து முதல் நாளே மக்கள் மன்றம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் காபி வித் காதல் திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் இந்த திரைப்படம் முதல் நாளில் மட்டுமே தமிழகத்தில் ஒரு கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் பல நட்சத்திர நடிகர், நடிகைகள் நடித்திருந்தால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்தது ஆனால் படம் கலவையான விமர்சனத்தை பெற்றதால் தற்போது இந்த படத்தை பார்க்கவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இதனால் அடுத்தடுத்த நாட்கள் இந்த திரைப்படத்தின் வசூல் குறையும் என கூறப்படுகிறது பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment