shivani-narayanan

விளம்பரம் செய்ததால் பிக்பாஸ் ஷிவானி நாராயணனை பங்கம் செய்யும் ரசிகர்கள்.!

தற்பொழுது உள்ள அனைத்து நடிகைகளும் தங்களுக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருபவர் தான் நடிகை ஷிவானி நாராயணன்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியல் மூலம் பிரபலமடைந்தார் அதன் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த இரட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்த இவருக்கு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது.இந்நிகழ்ச்சியின் நிலை வர வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஷிவானிக்கு திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் கடைசியில் தோல்வியை அடைந்தது அதாவது பெரிதாக திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு ஷிவானிக்கு கிடைக்கவில்லை மேலும் விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மூன்றாவது மனைவிகளில் ஒருவராக நடித்து இருந்தார்.

ஆனால் பெரிதாக இந்த படத்தில் இவரின் கேரக்டர் பேசப்படவில்லை சில நிமிடங்கள் கூட அவர் வர மாட்டார் என்பதுதான் அவருடைய ரோல் பெரிதாக பேசப்படவில்லை. தற்பொழுது வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் சிவானி நாராயணன் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக gambling app க்கு விளம்பரம் செய்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை மிகவும் கடுமையாக விலாசி வருகிறார்கள். பணத்திற்காக இப்படி இறங்கி விட்டாயா என ட்ரோல் செய்கின்றனர்.இருந்தாலும் இது போன்று ஏராளமான நடிகைகள் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் அதேபோன்று ஷிவானி நாராயணனும் விளம்பரம் செய்வதில் தப்பில்லை எனவும் கூறப்படுகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க எங்கு கிளிக் செய்யவும்..

balajishi

மெர்சல் பாடலுக்கு ரொமான்டிக் நடனமாடி பிக்பாஸ் போட்டியாளர்களையே ஆச்சரியப்பட வைத்த பாலாஜி, ஷிவானி!! வைரலாகும் வீடியோ.

shivani narayanan, balaji murugadass romantic video: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து  சுவாரஸ்யத்திற்கு குறை இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. தினமும் ஏதாவது ஒரு டாஸ்க்  கொடுத்து போட்டியாளர்களிடையே சண்டை, சச்சரவு, நட்பு, காதல், பாசம் என அனைத்தையும்  தூண்டி விட்டு கொண்டிருக்கிறார் பிக் பாஸ்.

அந்த வகையில் நேற்று பிருஸ்மா அழகிய ஜோடி என்ற போட்டியில் போட்டியாளர்கள் ஜோடியாக பிரிந்து கேட்வாக் செய்தபடி நடனமாடி வரவேண்டுமென கூறியிருந்தார்.

இதற்காக போட்டியாளர்கள் 2 நபர்களாக பிரிந்துகொண்டனர். அந்த வகையில் ஷிவானி நாராயணனும் பாலாஜி முருகதாசும் ஜோடியாக பிரிந்து கேட் வாக் செய்தபடி மாச்சோ என்னாச்சோ என்ற பாடலுக்கு மிக ரொமான்டிக்காக இருவரும் நடனமாடி அங்குள்ள போட்டியாளர்களையே ஆச்சரியமடைய செய்தனர்.

இவர்கள் இருவரின் ரொமான்ஸ்சை பார்த்ததும் போட்டியாளர்கள் மட்டும் ரசிகர்களின் முகங்களில் பயங்கர ஷாக் என்றே கூறலாம்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் ஷிவானி பாலாஜிக்கிடையே காதல் வந்துவிட்டதோ என வருத்தத்தில் உள்ளனர்.

archanabiggboss

ஆமா சாமி, நமத்துப் போன பட்டாசு, அட்மாஸ்பியர் ஆர்டிஸ்ட், போட்டியாளர்களுக்கு பட்டமளிக்கும் அர்ச்சனா!! வைரலாகும் வீடியோ.

archana giving awards to biggboss housemates video: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 4ல் இன்று முதல் பிரமோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. VJஅர்ச்சனா அவர்கள் ஓய்ல்டு கார்டு என்ட்ரியில் பிக்பாஸ் வீட்டிற்கு வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் ஆனால் அவர் ஒரு வாரம் முடிந்து இன்றே வந்துவிட்டார்.

இவர் வந்ததுமே பிக்பாஸ் வீடு களைகட்டும் என ரசிகர்கள் கூற ஆரம்பித்தனர். அதுபோலவே வந்தவுடன் சுரேஷ் சக்கரவர்த்தியின் சமையல் யாருக்குப் பிடிக்கும் என ஒரு கேள்வியை எழுப்பி இதன் மூலம் ஒரு பிரச்சினையை ஏற்படுத்தினார்.இவர் கேட்ட கேள்விக்கு அங்கிருந்த ரியோ அவர்கிட்ட பிடித்தது இந்த சமையல் மட்டும் தான் என பதிலளித்தனர்.

மீண்டும் அதைத் தொடர்ந்து அடுத்த ப்ரமோ வெளியானது இந்தப் ப்ரமோவில் வீட்டிலுள்ள ஹவுஸ் மேட்களுக்கு அர்ச்சனா அவர்கள் பட்டம் வழங்குகிறார். அந்தப் பட்டம் வழங்கும் போது மீண்டும் மிகப்பெரிய அளவில் சுவாரஸ்யமான பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது. சனம் ஷெட்டி மற்றும் பாலாஜிக்கு அர்ச்சனா மிக மோசமான பட்டத்தை வழங்குகிறார்.

இன்று இரவு பிக்பாஸ் வீடு அர்ச்சனாவின் வருகையால் மிகப் பெரிய அளவில் சூடுபிடிக்க போகுது என ரசிகர்கள் கூறுகின்றனர்.

archana

V Jஅர்ச்சனா என்ட்ரி!! கலைக்கட்டிய பிக்பாஸ் வீடு.!! வைரலாகும் ப்ரமோ வீடியோ…

archana entry biggboss promo video:நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி யாரும் எதிர்பாராத வண்ணம் மிக சுவாரஸ்யமாக இருந்தது. முதலில் நடந்த டான்ஸ் ஷோவில் சுரேஷ் சக்கரவர்த்தியும் அனிதா சம்பத்தும் மிக அழகாக பாட்டிற்கு ஏற்றார் போல் நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தார்கள்.

பின்னர் அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் ஒரு போட்டியை அறிவித்தார். அந்தப் போட்டியில் வீட்டில் உளள் ஹவுஸ் மேட்கள் 16 பேரும் 2 நபர்களாக பிரிந்து ஒரு பௌலில் பாலை போடவும் அப்படி போடுபவர்கள் அவர்கள் சொல்லும் ஒரு நபர் வெளியே செல்லனும் இப்படி ஒவ்வொருவராக வெளியே வந்ததும் கடைசியாக இருக்கும் ஒரு டீம் அதாவது இரண்டு பேர் ஜெயித்ததாக அர்த்தம்.

அப்படி கேமில் ஜெயித்தவர்கள் சனம் ஷெட்டி வேல்முருகன் அவர்கள் இருவரையும் இந்த வாரம் எலிமினேஷனுக்கு யாரும் நாமினேட் செய்ய முடியாது. ஏற்கனவே பிக்பாஸ் வீட்டுக்கு அர்ச்சனா வருவதாக இணையதளங்களில் தொடர்ந்து பேசப்பட்டு இருந்தது.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது வெளிவந்த ப்ரமோவில் பிக்பாஸ் வீட்டிற்கு அர்ச்சனா வந்துள்ளார். மேலும்  பிக் பாஸ் வீட்டில்  இனிமேல் நகைச்சுவைக்குப் பஞ்சமே இருக்காது எனவும் ஆட்டம் இன்னும் சூடு பிடிக்கும் எனவும் ரசிகர்கள் கூறுகின்றனர். இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ.