ஆமா சாமி, நமத்துப் போன பட்டாசு, அட்மாஸ்பியர் ஆர்டிஸ்ட், போட்டியாளர்களுக்கு பட்டமளிக்கும் அர்ச்சனா!! வைரலாகும் வீடியோ.

0

archana giving awards to biggboss housemates video: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 4ல் இன்று முதல் பிரமோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. VJஅர்ச்சனா அவர்கள் ஓய்ல்டு கார்டு என்ட்ரியில் பிக்பாஸ் வீட்டிற்கு வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் ஆனால் அவர் ஒரு வாரம் முடிந்து இன்றே வந்துவிட்டார்.

இவர் வந்ததுமே பிக்பாஸ் வீடு களைகட்டும் என ரசிகர்கள் கூற ஆரம்பித்தனர். அதுபோலவே வந்தவுடன் சுரேஷ் சக்கரவர்த்தியின் சமையல் யாருக்குப் பிடிக்கும் என ஒரு கேள்வியை எழுப்பி இதன் மூலம் ஒரு பிரச்சினையை ஏற்படுத்தினார்.இவர் கேட்ட கேள்விக்கு அங்கிருந்த ரியோ அவர்கிட்ட பிடித்தது இந்த சமையல் மட்டும் தான் என பதிலளித்தனர்.

மீண்டும் அதைத் தொடர்ந்து அடுத்த ப்ரமோ வெளியானது இந்தப் ப்ரமோவில் வீட்டிலுள்ள ஹவுஸ் மேட்களுக்கு அர்ச்சனா அவர்கள் பட்டம் வழங்குகிறார். அந்தப் பட்டம் வழங்கும் போது மீண்டும் மிகப்பெரிய அளவில் சுவாரஸ்யமான பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது. சனம் ஷெட்டி மற்றும் பாலாஜிக்கு அர்ச்சனா மிக மோசமான பட்டத்தை வழங்குகிறார்.

இன்று இரவு பிக்பாஸ் வீடு அர்ச்சனாவின் வருகையால் மிகப் பெரிய அளவில் சூடுபிடிக்க போகுது என ரசிகர்கள் கூறுகின்றனர்.