தீபாவளி ரேசில் இறங்கிய மூன்று டாப் ஹீரோக்களின் படங்கள்.! வெற்றி பெறுமா கார்த்தியின் ஜப்பான்..

Diwali Release Tamil Movie

Diwali Release Tamil Movie: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எப்பொழுதும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகுவது வழக்கம் அப்படி …

Read more

அனல் பறக்கும் அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் உருவாகி இருக்கும் விக்ரம் பிரபுவின் ‘ரெய்டு’ பட டீசர் இதோ.!

raid

கார்த்திக் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரெய்டு படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கார்த்திக் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் டாணாக்காரன், பொன்னியின் செல்வன் என பல வெற்றி திரைப்படங்களை தந்து வரும் விக்ரம் பிரபு அடுத்ததாக ரெய்டு படத்தில் நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்திற்கு சான் சி எஸ் இசையமைத்துள்ள நிலையில் இயக்குனர் முத்தையா டயலாக் எழுதியுள்ளார். இதனை அடுத்து இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கதிரவன் ஒளி பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு மணிமாறன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் சற்று முன்பு இந்த படத்தின் டீசரை நடிகர் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் நிலையில் தற்போது ரெய்டு படத்தின் டீசர் சோசியல் மீடியாவில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் விக்ரம் பிரபு அதிரடி ஆக்சன் காட்சிகளில் நடித்து மிரட்டி உள்ள நிலையில் வசனங்களும் அனல் பறக்கும் அளவிற்கு மாசாக உள்ளது.

இந்த படத்தின் மூலம் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக இரண்டாவது முறையாக நடிகை ஸ்ரீதிவ்யா நடித்து வருகிறார் இதற்கு முன்பு இவர்களுடைய கூட்டணியில் வெள்ளக்கார துரை படத்தில் நடித்திருந்த நிலையில் ரெய்டு படம் இரண்டாவது முறையாகும். இவ்வாறு இந்த டீசர் வைரலாக விஜய், அஜித்தை போல் பல பஞ்ச் டயலாக்குகளை பேசி ஆக்ஷனில் கலக்குகிறார் விக்ரம் பிரபு என்பது தெரிய வருகிறது.