தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சியாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் நீயா நானா. இவ்வாறு விஜய் டிவி இந்த அளவிற்கு பிரபலம் அடைவதற்கு முக்கியமான காரணம் நீயா நானா என்று தான் கூற வேண்டும் அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் நிகழ்ச்சி இருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.
சமூகத்திற்கு நல்ல கருத்தினை கூறும் வகையிலும், தேவையான கருத்துக்களையும், தற்பொழுது நாட்டில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதையும் மையமாக வைத்து பல சுவாரசியமான தலைப்புடன் நீயா நானா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து தற்போது வரையிலும் பல வருடங்களாக கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார்.
தொடர்ந்து வாரம் வாரம் சனி ஞாயிறு மதிய நேரத்தில் இந்நிகழ்ச்சி பல சுவாரசியமான தலைப்புடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த வாரம் திருமணத்திற்கு பிறகு அம்மா பேச்சை கேட்டு நடக்கும் பெண்கள் அப்பெண்களின் கணவர்கள் என்னும் தலைப்பில் விவாதம் நடைபெறுகிறது. அதில் பெண்கள் ஏன் திருமணத்திற்கு பிறகும் அம்மா பேச்சை கேட்டு உங்கள் கணவர் அணியும் உடைகளில் இருந்து என்ன நடந்தாலும் நீங்கள் முடிவு செய்கிறீர்கள் எனவும் அந்த கணவருக்கு எந்த சுதந்திரமும் கிடையாது என்பது போலவும் விவாதம் நடைபெறுகிறது.
அந்த வகையில் தற்பொழுது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் கோபிநாத் தொடர்ந்து அடுத்தடுத்த பெண்களிடம் கேள்வி கேட்க அதற்கு அந்த பெண்கள் தங்களுடைய தாய் பாசத்தில் அப்படி சொல்கிறார்கள் என்று கூறுகின்றனர் அப்போது கோபிநாத் உங்கள் கணவரின் தாய் அதாவது உங்களுடைய மாமியார் இதேபோன்று சொன்னால் நீங்கள் கேட்பீர்களா என்று கேட்டதற்கு அதற்கு மறுக்கின்றார்கள்.
இவ்வாறு அனைத்து பெண்களும் தங்களுடைய அம்மாவை மட்டும் உயர்த்தி பார்க்கும் நிலையில் இதனால் நொந்து போன கோபிநாத் நான் இந்நிகழ்ச்சியில் இருந்து ரிட்டயர் ஆகிறேன் என்று கூறிவிட்டு வெளியேறுகிறார் இவர் விளையாட்டுக்கு இதை செய்தாலும் உண்மையில் அவருடைய முகத்தில் அந்த அளவிற்கு கோபம் இருக்கிறது.