பிரபலத்துடன் இணைந்து நடனம் ஆடிய மைனா நந்தினி.! இணையதளத்தில் பட்டையைக் கிளப்பும் வீடியோ.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் சின்னத் திரைக்கு அறிமுகமாகி பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தவர் நந்தினி.  இவரை பெரும்பாலும் நந்தினி என்று கூறினால் பலருக்கு தெரியாது மைனா என்ற பெயரின் மூலம் தான் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மனதிலும் குடியேறினார்.

இதனைத் தொடர்ந்து சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து வந்தார். இவ்வாறு பிரபலமடைந்த இவர் வெள்ளித்திரையிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் சில வருடங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த எங்க வீட்டுப்பிள்ளை திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இவருக்கு திரைப்படங்களாக இருந்தாலும் சரி சீரியலாக இருந்தாலும் காமெடி கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது.  இந்நிலையில் இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஜிம் மாஸ்டர் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஜிம் மாஸ்டருக்கு முன்பே ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெற்றவர்.

ஆனால் இந்த விஷயம் நந்தினிக்கு தெரியவில்லை. அதன்பிறகு திருமணமாகி சில நாட்களில் தெரிந்ததால் நந்தினி மாஸ்டரை விட்டுவிட்டு தன் வீட்டிற்கு வந்துவிட்டார். எனவே ஜிம் மாஸ்டர் துக்கம் தாங்கமுடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் சில காலம் நந்தினி பெரிதாக வெளியில் தலை காட்டாமல் இருந்து வந்தார்.

அதன் பிறகுதான் மீண்டும் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். இப்படிப்பட்ட நிலையில்தான் பிரபல சீரியல் நடிகர் யோகேஷ் நந்தினியிடம் காதலிப்பதாக கூறி பிறகு நந்தினிக்கும் பிடித்து இருந்ததால் இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு அழகிய பெண் குழந்தையும் சமீபத்தில் பிறந்துள்ளது.

இந்நிலையில் தற்பொழுது நந்தினி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வேலைக்காரன் சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் பிரபல பாடகியான என் எஸ் கே ரம்யாவின் கணவர் சத்யாவும் நடித்து வருகிறார். இந்நிலையில் நந்தினி மற்றும் சத்யா இருவரும் இணைந்து குத்துபாடல் ஒன்றுக்கு நடனம் ஆடிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

 

myna1

காதலர் தினத்தன்று கணவர் தந்த பரிசைப் பார்த்து கதறி அழும் மைனா நந்தினி!! வைரலாகும் வீடியோ.

சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற காதலர் தினத்தை பலர் கோலாகலமாக கொண்டாடி உள்ளார்கள். அந்தவகையில் நந்தினியின்  கணவர் நந்தினிக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் வழங்கியுள்ளார்.

நடிகை நந்தினி சின்னத்திரை வெள்ளித்திரை என்று மாறி மாறி நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அழகாவதற்கு டிப்ஸ்களை கூறிவருகிறார்.

காதலர் தினத்தன்று நந்தினியின் கணவர் யோகி கேக், டெடி பியர், துருவன் என்ற பெயர் இருக்கும் டாலர் இவை அனைத்தும் கொடுத்துவிட்டு கடைசியில் நந்தினா பெயரை நெஞ்சில் பச்சை குத்தியிருந்ததை காட்டில் இருந்தார் இதனை பார்த்த நந்தினி அன்பில் மெய்சிலிர்த்துப் போனார். யோகி ஆனந்தக் கண்ணீர் விட்டார்.

அவ்வபோது எடுத்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பெறுகிறது. இதோ அந்த வீடியோ.

 

maina nandhini

கணவரைக் கடத்திச் சென்று சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த மைனா.! கர்ப்பமாக இருக்கும் போது இவ்வளவு ரிஸ்க்கா.?

தற்போது இணையதளத்தில் ட்ரெணடிங்காக இருந்து வருபவர் நடிகை நந்தினி ஆவார். இவர் சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் பிரபலம் அடைந்தார். அதன் பிறகு திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில வருடங்களுக்கு முன்பு ஜிம் மாஸ்டர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஆனால் ஏற்கனவே முதல் திருமணமானதை மறைத்து நந்தினி திருமணம் செய்துகொண்டார் இதனை அறிந்த நந்தினி அவரை விட்டுவிட்டு பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். நந்தினி பிரிந்ததை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார் கார்த்திக்.

இந்நிலையில் சீரியல் நடிகரான யோகேஸ்வரன்னை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார் தற்பொழுது நந்தினி 4 மாத கர்ப்பமாக இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு நந்தின் பிறந்தநாளன்று யோகேஸ்வரன் சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் தற்பொழுது யோகேஸ்வரனின் பிறந்தநளன்று நந்தினி அவரின் கண்களை கட்டி காரில் கடத்தி சென்று சப்ரைஸ் தந்துள்ளார். அந்த சப்ரைஸ்சின் போது எடுத்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்துள்ளார் என பாராட்டி வருகின்றனர். இதோ அந்த வீடியோ.