தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் பாராட்டு பெறும் மைனா நந்தினி.!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இளசுகளின் மனதை வெகுவாக கவர்ந்த சீரியல் சரவணன் மீனாட்சி இந்த சீரியலின் மூலம் மைனா என்ற கேரக்டரின் நடிப்பின் முலம் பிரபலமடைந்தவர் தான் நடிகை நந்தினி.

இந்த சீரியலின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார் இதற்குப் பிறகு வெள்ளித்திரையிலும் துணை நடிகையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தாலும் ஒரு சில படங்களில் சின்ன ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த எங்க வீட்டு மாப்பிள்ளை திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இவர் நடிப்பில் மட்டுமல்லாமல் காமெடி ஷோக்களில் நடுவராகவும், ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார். இவ்வாறு பிசியாக இருந்த வந்த இவர் ஜிம் மாஸ்டர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அவருக்கு ஏற்கனவே ஒரு திருமணம் ஆகியிருந்ததை மறைத்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இதனை அறிந்த மாஸ்டரை விட்டு தனியாக வாழ்ந்து வந்தார். இதனை தாங்க முடியாத ஜிம் மாஸ்டர் தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகரான லோகேஸ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மாசமாக இருந்துவந்த நந்தினிக்கு சில நாட்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. முதன்முறையாக நந்தினியின் குழந்தை புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார்.இப்புகைப்படம் இணையதளத்தில் பரவி வருகிறது.

View this post on Instagram

#kurumba #youaremyworld #kurumbaphoto #willuploadsoon @myna_nandhu

A post shared by yogi✌✌ (@yogeshwaram_official) on