sunitha

வெள்ளித்திரைக்கு அறிமுகமாகும் குக் வித் கோமாளி சுனிதா.! ஹீரோ யார் தெரியுமா.? வைரலாகும் வீடியோ..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது அந்த வகையில் சில ஆண்டுகளாக ஒலிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.இந்த நிகழ்ச்சியில் கடந்த மூன்று வருடங்களாக கோமாளியாக பணியாற்றி வருபவர் தான் சுனிதா இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார்.

மேலும் இவருடைய தமிழ் பேச்சு மற்றும் காமெடி போன்றவை ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்று வருகிறது.இவருக்கு பெரிதாக தமிழ் பேச வராது என்பதால் சில வார்த்தைகள் மிகவும் தவறாக உச்சரிப்பார் எனவே மற்ற போட்டியாளர்கள் இவரை பங்கமாக கலைப்பார்கள் இதன் மூலம் தமிழ் ரசிகர்களின் ஃபேவரட் நடிகையாக மாறினார்.மேலும் குக் வித் கோமாளி சீசன் 3 ல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சந்தோஷ பிரதாப்பும் ஒருவர் இவர் இவரை சைட் அடிப்பது போல சுனிதா பின்னாடியே சுற்றி வருவார்.

எனவே இவர்களுடைய ரொமான்ஸ் மற்றும் காமெடி போன்றவை ரசிகர்கள் ரசித்து வந்தார்கள் தற்பொழுது நிலையில் சந்தோஷ் பிரதாப் நடிக்க இருக்கும் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக சுனிதா அது குறித்த வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். மேலும் அந்த வீடியோவில் இது வெறும் டிரைலர் தான் என்றும் விரைவில் இந்த படத்தின் அறிவிப்பு வெளிவரும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

sunitha
sunitha

மேலும் இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்ற பல பிரபலங்கள் தற்பொழுது வெளி திரையில் தொடர்ந்து நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வந்துள்ள நிலையில் கடைசியாக சுனிதாவும் வெள்ளித்திரை நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார் எனவே ரசிகர்கள் பலரும் இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

sunitha-1

ஸ்லீவ்லெஸ் புடவையில் ரொமான்டிக்கான பாடலுக்கு தனது இடுப்பழகு தெரியும்படி வளைத்து வளைத்து நடனமாடிய குக் வித் கோமாளி சுனிதா.! வச்ச கண்ணை எடுக்காமல் பார்க்கும் ரசிகர்கள்.!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் திறமை உள்ளவர்கள்  பிரபலமடைவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது.அந்த வகையில் நடன நிகழ்ச்சியின் மூலம் தனது சிறந்த நடனத் திறமையை வெளிப்படுத்தி பிரபலமடைந்தவர் சுனிதா.

இவர் இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்து இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் சொல்லும் அளவிற்கு பிரபலமடையவில்லை. இப்படிப்பட்ட நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்குபெற வாய்ப்பு கிடைத்தது இந்நிகழ்ச்சியில் தமிழ் பேசத் தெரியாத இவர்.

தப்பு தப்பாக தமிழை பேசியதால் அனைவரும் இவரை வைத்து காமெடி செய்து இதன் மூலம் பிரபலமடைந்தார் அதோடு பாட்டுப் பாடுகிறேன் என்ற பெயரில் அவர் செய்யும் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அஸ்வின்,பாலா, சிவாங்கி, புகழ் ஆகியோர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எவ்வளவு வரவேற்பு கிடைத்ததோ அதே போன்று சுனிதாவிற்கு தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

இவர் பிரபலமடைவதற்கு முக்கிய காரணம் புகழை திட்டுவது என்ற பெயரில் தப்பு தப்பாக பேசுவது சூப்பர் ஹிட் பெற்றது. இந்நிலையில் நடன கலைஞரான இவர் நடன போட்டியின் மூலம் பங்கு பெற்று பிரபலமடைந்தார்.தற்போது பல நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வருகிறார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் sunitha Xpress என்ற யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

அதில் மேக்கப் வீடியோ, ஷாப்பிங் செய்யும் வீடியோ, நடனம் ஆடும் வீடியோ போன்றவற்றை வெளியீட்டை மிகவும் ஆக்டிவாக இருந்து வந்த இவர் தற்போது தனது வீட்டிலேயே இருந்து வருவதால் காஞ்சனா 3 படத்தில் இடம்பெற்றுள்ள வாயா என் வீரா என்ற பாடலுக்கு நீலக் கலர் புடவையில் அசத்தலாக நடனம் ஆடும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.