Ajith_Kumar

அஜித் மறைமுகமாக உதவி செய்கிறார் என்பதெல்லாம் சுத்த பொய்…என வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை!! வைரலாகும் வீடியோ.

actress said about ajith video viral:தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து வருபவர் நடிகர் அஜித். இவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல அனைவருக்கும் உதவி செய்யும் நற்குணமும் உள்ளது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

இந்நிலையில் அங்காடித்தெரு திரைப்படத்தின் மூலம் அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை சிந்து. இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவர் நடித்த காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நாடோடிகள், தெனாவெட்டு, நான் மஹான் அல்ல, சபரி, கருப்புசாமி, போக்கிரி உள்ளிட்ட இன்னும் ஏராளமான படங்களில் நடித்து திரை உலகில் கலக்கி வந்தார்.

இந்நிலையில் இவருக்கு சமீப காலமாக மார்பக புற்று நோய் இருப்பதால் அறுவை சிகிச்சை செய்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். எனவே இந்த சிகிச்சைக்கு பிறகு இவரிடம் பணம் இல்லாத காரணத்தினால் பணம் வேண்டும் என்று கேட்டு வீடியோ ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் தல அஜித்தை பற்றிய ஒருசில வருத்தமான விஷயங்களை கூறி உள்ளார். அதாவது அஜித்தின் உதவியாளருக்கு குறைந்தது 10 முறையாவது போன் செய்து அஜித்திடம் கொடுங்கள் என்று கூறியிருப்பார் ஆனால் அவரின் உதவியாளர் சார் மிகவும் பிசியாக உள்ளார் என்று சிந்துவிடம் கூறினாராம்.

எனவே கோபமடைந்த சிந்து தற்பொழுது தல அஜித்தை பற்றி மிகவும் பெருமையாக அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால் நான் கேட்ட உதவிக்கு ரிப்ளை கூட பண்ண வில்லை என்று கூறி வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.