raja-rani

ராஜா ராணி சீரியல் நடிகையின் சொந்த மகனே கணவர், மகளை கொன்ற வெறிச்செயல்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் ராஜா ராணி இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்போது ராஜா ராணி சீரியல் நடிகையின் மகன் தன்னுடைய தந்தை மற்றும் அக்காவை கழுத்தை அறுத்துக் கொலை செய்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் சீரியல்களில் ஒன்றான ராஜா ராணி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை சாந்தி.

இவர் காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் அந்த பகுதியில் தான் இவர் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய கணவர் செல்வராஜ் இசைப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் நிலையில் இவர்களுக்கு ராஜேஷ், பிரகாஷ் என்ற மகன்களும் பிரியா என்ற மகளும் இருக்கிறார்கள்.

ராஜேஷ் மற்றும் பிரியா இருவருக்கும் திருமணமான நிலையில் இவர்கள் இருவருமே தனியாக சென்று விட்டனர். சாந்தியின் மகள் பிரியா தன்னுடைய பெற்றோரின் வீட்டு அருகே தன்னுடைய கணவர், குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர்களுடைய கடைசி மகன் தான் பிரகாஷ் இவர் மட்டும் தன்னுடைய பெற்றோர்களுடன் இருக்கிறார். இவர் டப்பிங் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று காலை தன்னுடைய அக்கா பிரியா வீட்டிற்கு பிரகாஷ் சென்று இருக்கிறார் அங்கு இருவருக்குமே வாக்குவாதம் ஏற்பட பிறகு இவர்களுக்கிடையே ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்ற கோபத்தில் பிரகாஷ் கத்தியை எடுத்து பிரியாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பித்து இருக்கிறார். இந்த சம்பவத்தை பார்த்த பிரியாவின் குடும்பத்தினர்கள் அழுதுக் கொண்டே சாந்தியின் வீட்டிற்கு செல்ல அங்கு சாந்தியின் கணவர் செல்வராஜ் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.

கொலை செய்யப்பட்டவர்கள்
கொலை செய்யப்பட்டவர்கள்

இவ்வாறு பிரகாஷ் தன்னுடைய தந்தையை கொலை செய்த பிறகு தான் தனது அக்கா பிரியாவை கொலை செய்திருக்கிறார் என்பது தெரிய வந்தது. எனவே இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். பிரகாஷிடம் போலீஸ் விசாரணையில் அவர் கஞ்சா மற்றும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரியவந்தது எனவே அவர் மன நலமும் பாதிக்கப்பட்ட இருப்பதாக தெரிய வந்துள்ளது.