பிரபல விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் உலகம் முழுவதும் பெரும் ஆதரவை பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சி தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு,மலையாளம்,இந்தி, கன்னடம், மராத்தி என இன்னும் பல மொழியிலும் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் சினிமாவில் பிரபலம் அடையாத மற்றும் முகம் தெரியாத பலரையும் அறிமுகப்படுத்தி அவர்களுக்கு சினிமாவில் ஒரு அங்கீகாரத்தை பெற்றுத் தருவது தான்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைத்து போட்டியாளர்களும் பிரபலம் அடைந்து விடுவார்கள். ஒரு சிலர் தங்களது நல்ல குணத்தால் ரசிகர்கள் மனதை கவர்ந்து அவர்களுக்கு என்று தனி பட்டாளத்தை உருவாக்கி விடுவார்கள்.
இந்நிலையில் தமிழில் கடந்த நான்கு வருடங்களாக இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அந்தவகையில் பிக்பாஸ் சீசன் 4 கலந்துகொண்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர்கள் பாலாஜி, சம்யுத்தா இவர்களும் பலரை கவர்ந்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் இருந்தது சம்யுத்தா பாதியிலேயே வெளியேறினாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து பாலாஜி 105 நாட்கள் வரை தாக்குபிடித்து ரன்னராக வெற்றி பெற்றார்.
இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் மூலம் சம்யுத்தா,பாலாஜி இருவருமே திரைப் படங்களில் நடிப்பதற்காக சில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது சம்யுத்தா,பாலாஜி இருவரும் குத்து பாடல் ஒன்றுக்கு நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த வீடியோ.