கோலகலமாக திருமணம் செய்துக் கொண்ட விஜய் டிவி காதல் ஜோடிகள்.! வைரல் புகைப்படம்..

0
samyuktha

விஜய் டிவி சீரியல்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் தற்பொழுது பிரபல சீரியல் நடிகை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுடைய திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் சிப்பிக்குள் முத்து என்ற சீரியலின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானவர் தான் நடிகர் விஷ்ணுகாந்த்.

இந்த சீரியலினைத் தொடர்ந்து ஜீ தமிழ், சன் டிவி என பல தொலைக்காட்சி சீரியல் நடித்து வந்த நிலையில் இவர் கடந்த சில வருடங்களாக சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்து வரும் நடிகை சம்யுக்தா என்பவரை காதலித்து வந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் நேற்று பெற்றோர் சமதத்துடன் திருமணம் நடந்துள்ளது.

திருமணம் குறித்த புகைப்படங்களை நடிகர் விஷ்ணுகாந்த் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா இருவரும் காதலிக்க தொடங்கிய நிலையில் ஆனால் அதனை வெளியில் சொல்லாமல் இருந்து வந்தனர்.

vishnu-kandh
vishnu-kandh

பிறகு விஷ்ணுகாந்த் முதலில் தன்னுடைய அம்மாவிடம் சம்யுக்தாவை அறிமுகம் செய்த நிலையில் அவர்களுடைய வீட்டிற்கு பிடித்து விட்டது அதன் பிறகு தான் சம்யுக்தா தன்னுடைய குடும்பத்தில் பர்மிஷன் வாங்கினார். இந்நிலையில் இருவரும் இணைந்து போட்டோ ஷூட் நடத்தி தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர பிறகு பல சேனல்களுக்கு பேட்டியும் அளித்தனர்.

vishnu-kandh-1
vishnu-kandh-1

இதன் மூலம் தான் இவர்கள் காதலித்து வருவது உறுதியானது விஷ்ணுகாந்த் இதற்கு முன்பு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த கோகுலத்தில் சீதை, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி உள்ளிட்ட இன்னும் சில சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நிறைமாத நிலவே என்ற வெப் தொடரில் சம்யுக்தா நடித்து வந்த நிலையில் இதில் இவருக்கு மிகப்பெரிய பிரபலம் கிடைத்தது.

இந்நிலையில் சமூக வலைதளத்தில் காதலராக வலம் வந்த இவர்கள் நேற்று இருவரும் தங்களுடைய பெற்றோர் சொன்னதுடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர். எனவே விஷ்ணு காந்த் உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுடன் நான் ஒரு புதிய வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறேன் என்றும் லவ் யூ டி பொண்டாட்டி என்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் எனவே இவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.