vishnu-kandh

குற்றம் சாட்டிய சம்யுக்தாவை ஆதாரத்துடன் பழி வாங்கிய விஷ்ணுகாந்த்.! கிழிந்த முகத்திரை..

சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் இன்ஸ்டாகிராம் லைவ் தோன்றிய நிலையில் சம்யுக்தாவின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரத்துடன் விளக்கம் அளித்தார். இப்படிப்பட்ட நிலையில் இதற்கு மீண்டும் சம்யுக்தாவுக்கு பதிலடி கொடுத்திருக்கும் நிலையில் அது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சமீப காலங்களாக ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் தங்களுடன் நடிக்கும் சக நடிகர், நடிகைகளை காதலித்து திருமணம் செய்துக் கொண்டு வருகிறார்கள்.

அப்படி சின்னத்திரையில் பிரபல நடிகரான விஷ்ணுகாந்த் மற்றும் யூடியூப் பிரபலமும் , சீரியல் நடிகையுமான சம்யுக்தா இருவரும் சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் தங்களுடைய பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர். இப்படிப்பட்ட நிலையில் திருமணமாகி 15 நாட்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்து வந்ததாகவும் சமீப காலங்களாக தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இருவரும் சமூக வலைதளத்தில் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வரும் நிலையில் சோசியல் மீடியாவில் மிகவும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விஷ்ணுகாந்த் லைவில் தோன்றிய சம்யுக்தாவின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களுடன் விளக்கம் அளித்துள்ளார்.

சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாவம் கணேசன், சிற்பிக்குள் முத்து போன்ற சீரியல்களில் நடித்தவர் தான் சம்யுக்தா. இவரும் விஷ்ணுகாந்தும் சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்த பொழுது பழக்கம் துவங்கியுள்ளது. எனவே சமூக வலைதளத்தின் வாயிலாக தங்களுடைய காதலை ரசிகர்களுக்கு அறிவித்தனர் இதனை அடுத்து தங்களது வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டார்கள்.

இவ்வாறு திருமணமான இரண்டு மாதங்களில் இந்த ஜோடி விவாகரத்து சரிசையில் சிக்கிவுள்ளது. அதாவது இருவரும் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் தொடர்பான புகைப்படங்களை டெலிட் செய்த நிலையில் மேலும் ஒருவரை ஒருவர் அன்பாலோ செய்துக் கொண்டார்கள் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வந்த நிலையில் பிறகு விஷ்ணுகாந்த் சம்யுக்தாவை பிரிந்து விட்டதாக பிரபல யூட்யூப் சேனல் பேட்டியின் மூலம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டி கொண்டு வரும் நிலையில் நேற்று மீண்டும் லைவில் வந்த விஷ்ணுகாந்த் சம்யுக்தா தனது உறவினர்களிடம் ஃபோன் பண்ணி வீடியோ, ஆடியோ ஆதாரங்களை வெளியிடப் போவதாக மிரட்டியதாக கூறினார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் லைவில் பேசிய விஷ்ணுகாந்த் சம்யுக்தாவின் சித்தியிடம் பேசி ஆடியோவை போட்டு காண்பித்துள்ளார்.  தான் யாரையும் மிரட்டவில்லை என்றும் சமயுக்தா தன்னை பற்றி இப்படியெல்லாம் பேசுகிறார். ஒரே ஒரு முறை குடும்பத்துடன் வந்து தனது பெற்றோர்களை பாருங்கள் என்று மட்டுமே அவர்கள் சித்தியிடம் பேசியதாக தெரிவித்துள்ளார்.

விஷ்ணுகாந்த் மேலும் அவரது சித்தி பேசி ஆடியோவை வெளியிட்டு தனக்கு வந்த சமனையும் லைவில் காட்டியுள்ளார். சம்யுக்தாவின் லைப் வீணாகி விடக்கூடாது என்பதற்காகவே தற்பொழுது வரை தான் பொறுமையாக உள்ளதாகவும் 24 மணி நேரமும் தான் கேட்டுக்கொண்டே இருப்பேன் ஏனென்றால் என்னை பற்றி பேசி இருக்கிறீர்கள். அப்படியெல்லாம் ஒரு மனிதனால் இருக்க முடியாது என்றும் விஷ்ணுகாந்த் தெரிவித்துள்ளார் அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..