இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் உருவாகி இருக்கும் கஸ்டடி படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்திருக்கும் நிலையில் தற்போது பட குழுவினர்கள் பட பிரமோஷன் பணிகளில் தீவிரமாக களமிறங்கி உள்ளனர். இந்த படம் வருகின்ற மே 12ஆம் தேதி அன்று தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில் சற்று முன்பு இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஆக்சன் படமாக உருவாகி இருக்கும் கஸ்டடி படத்தில் போலீஸ் அதிகாரியாக நாக சைதன்யா நடித்துள்ளார். மேலும் அரவிந்த்சாமி வில்லனாக நடிக்க இந்த படத்தின் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் கீர்த்தி செட்டி கதாநாயகியாக நடிக்க இவரை தொடர்ந்து பிரியாமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இதனை அடுத்து நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு வெங்கட்ராஜன் படத்தொகுப்பில், எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த மாநாடு படம் மிகப்பெரிய வெற்றினை பெற்ற நிலையில் இந்த படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகின்றனர்.
இந்த பட டீசரில் காயப்பட்ட ஒருத்தனை எந்த எல்லைக்கும் கொண்டு போய்விடும்.. அது என்ன இப்ப இங்கே போய் கொண்டிருக்கின்றது என்பது எனக்கு தெரியும்.. அது ஒரு போர்க்களம். சாவு என்னை துரத்திகிட்டு இருக்கு என்று எனக்கு நன்றாக தெரியும்.. ஆனால் இது எப்போ எப்படி எங்கிருந்து வரும் என்று எனக்கு தெரியாது.. தெரிந்து கொள்ள நான் விரும்பவும் இல்லை.. ஏன்னா நான் கையில் எடுக்கிற ஆயுதம் ஒரு நிஜம்.. அந்த நிஜத்தை நீங்க எவ்வளவு அழகாக புதைத்தாலும் ஒரு நாள் அது திமிருகிட்டு வெளியே வந்தே தீரும் என்ற வசனங்களுடன் இடம்பெற்றுள்ளது.