venkat-prabhu

அப்பாவை மிஞ்சிய இயக்குனர் வெங்கட்பிரபு மகள்!! வைரலாகும் வீடியோ.

venghat prabhu daughter sing a song video viral: பிரபல இயக்குனரும், நடிகருமான வெங்கட் பிரபுவின் மகள் சிவானி அவர்கள் தற்போது இசைப்பள்ளியில் முதலாமாணடு மாணவியாக பயின்று வருகிறார்.மேலும் இவர் கங்கை அமரன் மற்றும் இளையராஜா அவர்களின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

இசை மேல் இவருக்கு உள்ள ஆர்வத்தால் ஐந்து வயதிலேயே தாலி என்ற ஆல்பத்தில் பாடி தான் ஒரு இசை குடும்பத்தை சார்ந்தவர் என நிரூபித்தார்.

இசைப் பள்ளியில் சேர்ந்த இவர் தனது சக மாணவர்களுடன் இணைந்து ஒரு சில பாடல்களை கம்போஸ் செய்து பாடியுள்ளார்.

மேலும் உலகப் புகழ்பெற்ற லசாரஸ் பாடல்களை தங்களது பாணியில் சிவானி மற்றும் அவரது நண்பர்கள் இசையமைத்து பாடிய பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதைப்பார்த்த இசை ரசிகர்கள் அவரைப் பாராட்டி இந்த பாடலை வைரலாக்கி வருகின்றனர்.

வீடியோ இதோ.

spb-Gangai-Amaran (1)

Spb கடைசியா வாடா போடான்னு சந்தோஷமாக வீடியோ காலில் வெங்கட் பிரபு, பிரேம்ஜி மற்றும் கங்கை அமரனுடன் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.!! இதோ அந்த வீடியோ.

legend spb and his son friendly talk on video call with kangaiamaran, premji, vengatprabhu video: எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் உடல்நலக் குறைவால் இரண்டு நாட்களுக்கு முன்பு காலமானார் என்பது அனைவரும் மனதிலும் இடியாய் விழுந்தது. இது கனவாக இருக்க கூடாதா என இன்னும் ஏங்குபவர்கள் பலர். எஸ்பிபி அவர்கள் பாடல் வரிகளில் வருவது போல வெள்ளை மனம் பிள்ளை குணம் கொண்டவர்.

spb அவர்கள் மிகவும் எளிமையான மனிதர், பாகுபாடின்றி அனைவரிடமும் பழகுபவர், இதுவரை எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காதவர் என மிகவும் உறுதியாகக் கூறலாம் அந்த அளவுக்கு மாமனிதர்.

இவரது இழப்பு உலகம் முழுவதும்  உள்ள அவரது ரசிகர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடல் நம்மை விட்டுப் பிரிந்தாலும் இவரது குரல் காலம் காலமாக தொடரும் என்பது எந்த ஒரு மாற்றமும் இல்லை. இவர் ஒரு அழியா மனிதர். இவர் என்றும் இயங்கும் ஒளியாய் இருப்பார் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை.

spb மற்றும் அவரது மகன் சரண் இருவரும் சில நாட்களுக்கு முன்பு வீடியோ கால் மூலமாக  கங்கை அமரன்,  பிரேம்ஜி, வெங்கட் பிரபு ஆகியோர்களுடன் பேசும்போது மிகவும் இயல்பாக வாடா போடா என அவ்வளவு உரிமையுடன் நட்பாக பேசி விளையாடிய வீடியோ இணையதளத்தில் பரவலாகி வருகிறது.

அந்த வீடியோவை பார்த்து கண்கலங்காத மனிதர்களே கிடையாது. அந்த அளவுக்கு எஸ்பிபி அவர்கள் சிரித்து சந்தோஷமாக பேசியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://youtu.be/jv6AXIQg5og