சூர்யா, சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகும் S 43 பட டைட்டில் வெளியானது.! இதோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Purananooru : தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வருவர் நடிகர் சூர்யா. இவர் தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வருகிறார். எதற்கும் துணிந்தவன், ஜெய் பீம் போன்ற படங்களை தொடர்ந்து கங்குவா திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இந்த படத்தை சிறுத்தை சிவா தன்னுடைய கற்பனை கதை மற்றும் 70களில் மக்களின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது என இரண்டையும் கலந்து படமாக எடுத்து வருகிறார் படம் முழுக்க முழுக்க காடு மலைகளில் தான் உருவாகி வருகிறது சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு, கோவை சரளா..

இரவு 10 மணிக்கு அமீரை தொந்தரவு செய்த பிரபல நடிகை.. நேரம் காலம் பார்க்காமல் காப்பாற்றிய தனுஷ்.!

ரவி ராகவேந்திரா, ஆனந்த்ராஜ், பி எஸ் அவினாஷ், நடராஜன் சுப்பிரமணியம், கே எஸ் ரவிக்குமார், ஆராஷ் ஷா, நவின் சிங், ஜெகபதி பாபு மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். சூர்யா கங்குவா படத்தின் ஷூட்டிங் முடிந்து பிறகு  அடுத்து சுதா கொங்காராவுடன் கூட்டணி அமைத்து ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்திகள் எல்லாம் வெளியாகிய நிலையில் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது..

சுதா கொங்கரா  இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு புறநானூறு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தில் சூர்யாவுடன் இணைந்து துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா போன்ற முன்னணி நடிகர், நடிகைகள் நடித்த உள்ளனர்.

வதந்திகளை நம்பாதீங்க.. அஜித்துக்கும், எனக்கும் உள்ள ரிலேஷன்ஷிப் இதுதான் – பிரசாந்த் பேட்டி.!

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இதனை அதிகாரப்பூர்வமாக வீடியோவாக வெளியிட்டுள்ளது. இதனை சூர்யா ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.