சன் டிவியில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் எதிர்நீச்சல் இந்த சீரியலில் அருண் மற்றும் ஆதிரா நிச்சயதார்த்த ஏற்பாடுகள் தடபுடலாக நடந்துவரும் நிலையில் இன்றைய எபிசோடுல் என்ன நடக்கப் போகிறது என்பது குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதாவது இந்த சீரியலில் தொடர்ந்து பல திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் குடும்ப இல்லதரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
அந்த வகையில் இந்த சீரியல் முழுக்க முழுக்க பெண்களுக்கு எதிராக நடக்கும் நடக்கும் அடக்கு முறையை பெண்கள் எழுத்து கேள்வி கேட்க வேண்டும் அனைத்து தடைகளையும் உடைத்து முன்னேற வேண்டும் என்பதனை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருவதால் பல பெண்கள் இதனை பார்த்து தைரியமாக இருந்து வருகிறார்கள்.
மேலும் இதனால் தன்னுடைய மனைவியின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதாகவும் எனவே இந்த சீரியலை நிறுத்த வேண்டும் எனவும் பல ஆண்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால் இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருவதால் வெற்றிகரமாக இயக்குனர் ஒளிபரப்பி வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் பல பிரச்சினைகளுக்கு பிறகு அருணா- ஆதிரை இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. எனவே தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் அருண், ஆதிரை இருவரும் மாலை மாற்றி சபைக்கு நமஸ்காரம் செய்ய அரசு மாதிரிக்கு எழுதிக் கொடுப்பதாக சொன்ன டாக்குமெண்டில் கையெழுத்து போட்டு கொடுத்து விட்டால் நிச்சயதார்த்த தாம்பூல தட்டை மாற்றிக் கொள்ளலாம் என சொல்ல ஜனனி என்ன பேசிகிட்டு இருக்கீங்க என அதிர்ச்சியடைகிறார்.
மேலும் அடுத்ததாக குணசேகரன் என்ன முதலாளி என் மேல நம்பிக்கை இல்லையா என எஸ்.கே, ஆதிரையை பார்த்த கேள்வி கேட்கிறார். எனவே இவர்களுடைய திருமணம் பல பிரச்சனைகளுடன் நடக்க இருக்கும் நிலையில் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.