மேல இருக்குறவன் கீழ வந்துதான் ஆகணும்.. சன் டிவி சீரியலை பின்னுகுத்தள்ளி முன்னேறும் விஜய் டிவி.. இதோ TRP லிஸ்ட்

This week trp reting: சன் டிவி, விஜய் டிவி சீரியல்கள் போட்டி போட்டுக் கொண்டு பல சீரியல்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படி புதிய கதை அம்சத்துடன் ஏராளமான சீரியல்களை அறிமுகப்படுத்தி வரும் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் இந்த நான்கு தொலைக்காட்சி சீரியல்களை தான் மக்கள் அதிகம் விரும்பி பார்த்து வருகின்றனர்.

இதில் முக்கியமாக சன் டிவியும் விஜய் டிவியும் தொடர்ந்து போட்டி போட்டு கொள்கிறது. வாரம் தோறும் டிஆர்பி லிஸ்ட் சோசியல் மீடியாவில் வெளியாகி வரும் நிலையில் இதில் பெரும்பாலும் சன் டிவி சீரியல்கள் தான் முதலிடத்தில் இருந்தது ஆனால் இந்த வாரம் விஜய் டிவி கொஞ்சம் முன்னேறி உள்ளது.

தனுஷை தூக்கி நிறுத்த போகும் கேப்டன் மில்லர்.! எதிர்பார்ப்பை எகிற வைக்க ரிலீஸ் தேதியுடன் வெளியானது ட்ரெய்லர்..

அதன்படி சன் டிவியில் சமீபத்தில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் சிங்கப் பெண்ணே சீரியல் 11.44 புள்ளிவுடன் டிஆர்பியில் முதல் இடத்தில் உள்ளது. கடந்த வாரமும் இந்த சீரியல் தான் முதலிடத்தில் இருந்தது. இதனைத் தொடர்ந்து கயல் சீரியல் 10.52 புள்ளிகளுடன் டிஆர்பியில் இரண்டாவது இடத்தினை பிடித்துள்ளது.

மேலும் மூன்றாவது இடத்தில் வானத்தைப் போல, நான்காவது இடத்தில் எதிர்நீச்சல், ஐந்தாவது இடத்தில் சுந்தரி சீரியல் என தொடர்ந்து மூன்று சீரியல்களும் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளது இவ்வாறு முதல் ஐந்து இடங்களில் சன் டிவி சீரியல்கள் தான்.

புத்தாண்டு பார்ட்டியில் எசக்கு பசக்காக விளையாடிய நடிகை.! பார்க்கக் கூடாததை பார்த்ததால் பயந்து ஓடிய டிரைவர்..! அப்பறம் என்ன மிரட்டல் தான்

இதனை அடுத்து 6வது இடத்தில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் 8.27 புள்ளிகளை பெற்றுள்ளது. 7வது இடத்தில் 7.94 புள்ளிகள் உடன் இனியா சீரியல், 8வது இடத்தில் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல், 9வது இடத்தில் விஜய் டிவியின் ஆஹா கல்யாணம். இதனை அடுத்து கடந்த வாரம் சன் டிவியில் 7வது இடத்தை பிடித்த ஆனந்த ராகம் சீரியல் இந்த வாரம் 6.33 புள்ளிகள் உடன் டிஆர்பியில் 10வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.