80-90களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர் ஐஸ்வர்யா பாஸ்கர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர். ஒரு காலகட்டத்தில் பட வாய்ப்பு குறைந்ததால் அக்கா, அம்மா போன்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தெலுங்கு சினிமாவில் தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கிய இவர் தமிழில் முதன்முதலாக மில் தொழிலாளி என்ற திரைப்படத்தில் கீதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு தையல்காரன், மரிக்கொழுந்து ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார் ஆனால் இந்த திரைப்படங்கள் அவருக்கு பெரிதாக வரவேற்பு பெற்றுக் கொடுக்கவில்லை பின்பு பாக்யராஜ் நடித்து வெளியாகிய ராசுகுட்டி என்ற திரைப்படத்தில் ராசுகுட்டிக்கு லவ்வராக நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார்.

மேலும் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த இவர் ஒரு காலகட்டத்தில் அதாவது ஆயிரத்து 994 ஆம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு வருடத்தில் அணைனா என்ற பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் மனமொத்து பிரிந்து விட்டார்கள்.
பின்பு போதைக்கு அடிமையான ஐஸ்வர்யா அதில் இருந்து மீண்டு வர நீண்ட காலம் ஆகிவிட்டது. அதிலிருந்து மீள்வதற்காக சினிமாவில் அதிக கவனம் செலுத்தினார் அப்பொழுது அக்கா, அம்மா என குணசித்திர வேடம் என அதிக படங்களில் நடித்து வந்தார் மேலும் இவர் யூடியூப் சமூக வலைத்தளத்தில் சவுண்ட் சரோஜா என்னும் பெயரில் சமையல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த சேனலுக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு நிலவி வருகிறது. பொதுவாக சினிமாவில் வாழ்ந்து கெட்டவர்கள் பலர் இருக்கிறார்கள் அவர்களில் இவரும் ஒருவர் தற்பொழுது இவர் தன்னுடைய இரண்டாவது கணவருடன் வாழ்ந்து வருகிறார் அதுவும் தனது மகளுடன்.
இந்த நிலையில் இவரின் புகைப்படம் சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் இவரின் மகள் புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது அவர் மிகவும் மார்டனாக செம அழகாக இருக்கிறார். அழகில் அம்மாவையே மிஞ்சி விட்டார் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.