இமான் பிரச்சனை ஓய்ந்தும் சிவகார்த்திகேயனுக்கு விழுந்த அடுத்த அடி.! அதிர்ச்சியில் பட குழு

Sivakarthikeyan : நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய மாவீரன் திரைப்படம் ஓரளவு ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது இதனைத் தொடர்ந்து ரங்கூன் திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய திரைப்படத்தில் நடித்த வருகிறார் இந்த திரைப்படத்தில் சாய் பல்லவி தான் நாயகியாக நடித்த வருகிறார்.

படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர் நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இணைந்துள்ளார் தற்காலிகமாக இந்த திரைப்படத்திற்கு எஸ் கே 21 என பெயர் வைத்துள்ளார்கள். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது ராணுவத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த திரைப்படத்தின் கதையில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்து வருகிறார்.

பாம்பு நேரங்காலம் பாக்காது கொத்தும்.. நயன்தாரா படத்தில் நடிக்காதே சமந்தாவை வான் பண்ணிய பிரபலங்கள்

அதேபோல் இதுவரை சிவகார்த்திகேயன் தந்தையாக நடித்தது கிடையாது இந்த திரைப்படத்தில் முதன்முறையாக தந்தையாக நடிக்கிறார் அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது இந்த நிலையில் படத்திலிருந்து ஒரு சில காட்சிகள் இணையதளத்தில் கசிந்து படக்குழுவை அதிர்ச்சியாக்கி உள்ளது குழந்தையுடன் சாய்பல்லவி இருக்கும் புகைப்படம் அந்த காட்சியில் இடம் பெற்றுள்ளது இந்த காட்சியை இணையதளத்தில் கசந்துள்ளதால் உடனே பட குழு இணையதளத்தில் இருந்து அந்த காட்சியை நீக்கி உள்ளது.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் இமான் பிரச்சனை புயல் போல் வீசிய நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் அடுத்த அடியாக இந்த காட்சி வெளியாகி உள்ளது மேலும் இந்த காட்சியை யாரும் பகிர வேண்டாம் என படக்குழு கோரிக்கை வைத்து வருகிறது.

Thalapathy 68 : ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து வெளியான புதிய புகைப்படம்.! யார் யார் இருக்காங்க பாருங்கள்..

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்