தமிழ் சினிமாவில் இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் எஸ் ஜே சூர்யா இவர் வாலி, குஷி ஆகிய திரைப்படங்களை இயக்கி மிகப் பெரிய இயக்குனர் என்று நிரூபித்தவர். அதுமட்டுமில்லாமல் தனது இயக்கத்தில் வெளியாகிய நியூ, அன்பே ஆருயிரே இசை ஆகிய திரைப்படங்கள் மூலமாக ஒரு நடிகனாக தன்னை காட்டிக் கொண்டார்.
படத்தை தானே இயக்கி தானே நடித்து வந்த sj சூர்யா மற்ற இயக்குனர்களின் திரைப் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார் அந்த வகையில் இறைவி, மான்ஸ்டர், நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது. பொதுவாக ஹீரோவாக நடித்து வந்த எஸ் ஜே சூர்யா வில்லன் கதாபாத்திரத்திலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்த ஆரம்பித்தார்.
அந்த வகையில் ஸ்பைடர், மெர்சல் ஆகிய திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். அதுமட்டுமில்லாமல் திரைக்கு வர இருக்கும் மாநாடு, தான் கடமையை செய் ஆகிய திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தநிலையில் எஸ்ஜே சூர்யா வெங்கட்ராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் கடமையை செய் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தில் யாஷிகா ஆனந்த் ஹீரோயினாக நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திற்கு அருண்ராஜ் தான் இசையமைத்துள்ளார் இந்த நிலையில் படத்தில் யாஷிகா ஆனந்த் இணைந்துள்ளதால் ரசிகர்களிடம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது அப்படி இருக்கும் நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிட்டுள்ளார்கள்.
இந்த போஸ்டர் ரசிகர்களிடம் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது இந்த போஸ்டரை சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
Very happy to release the first look of #KADAMAIYAISEI 😊👍
Wishing a great success to @iam_SJSuryah sir @iamyashikaanand Dir Venkat Ragavan Producer Tr Ramesh , Zahir Hussain and the entire team for a huge success 😊 pic.twitter.com/jCuOeDMKf6
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 9, 2021