தோல்வி பட இயக்குனர் திரைப்படத்தில் ஹீரோவாக களமிறங்கும் எஸ் ஜே சூர்யா.! அடுத்த மார்க் ஆண்டனியோ..

தமிழில் தற்பொழுது ஹீரோ, வில்லன், காமெடி என ஆல் ரவுண்டராக வலம் வருபவர் எஸ் ஜே சூர்யா. இவர் இயக்குனராகவும் நடிகராகவும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

மேலும் தற்பொழுது இவர்  வில்லனாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மார்க் ஆண்டனி போன்ற திரைப்படங்களில் நடித்து மிரட்டி இருந்தார். பின்னர் அதனைத் தொடர்ந்து இந்தியன் 2, கேம் சேஞ்சர், தனுஷின் D 50 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள  இந்தத் திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியாக உள்ளது. இவர் நடிக்கும் படங்களுக்கு சுமாராக 8 கோடி வறை சம்பளம் வாங்குவதாக பேசப்படுகிறது.

சமந்தாவுக்கு ஆர்டர் போட்ட குடும்பத்தினர்!! ரெடியாகும் இரண்டாவது திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

இவரின் கால் சீட்டுக்காக பல இயக்குனர்கள் தற்போது காத்துக்கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் நடிகர் கார்த்திக்கை வைத்து ஜப்பான் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ராஜு முருகன் எஸ் ஜே சூர்யா உடன் இணைய உள்ளார்.

ராஜமுருகன் இயக்கத்தில் அம்பேத்குமாரின் ஒலிம்பியா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் எஸ் ஜே சூர்யா ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த திரைப்படம் சமூகத்தில்  நடக்கும் பிரச்சனையை மையமாக வைத்து சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வு கொடுக்கும் படமாக உருவாக உள்ளது என தெரிய வந்துள்ளது. இந்த திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாளில் வெளியாக உள்ளது.

ராஜி கழுத்தில் தாலியை கட்டிய கதிர்.! பாக்யாவிடம் உதவி கேட்கும் கோமதி.! பரபரப்பின் உச்சத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ்..