திடீரென சம்பளத்தை குறைத்துக் கொண்ட சிவகர்த்திகேயன்.. எல்லாம் இந்த இயக்குனருக்காக தானாம்.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்

sivakarthikeyan
sivakarthikeyan

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோ சிவகார்த்திகேயன்.. இவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை பக்கம் தாவியவர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.. சினிமா எப்படி எந்த கதைகள் எடுத்தால் மக்கள் மற்றும் ரசிகர்கள் பார்ப்பார்கள், தன்னை எப்படி தொடர்வார்கள்.. என்பதை நன்கு உணர்ந்து கொண்டு ஒவ்வொரு படத்திலும்..

நடித்ததால் வெற்றி இவருக்கு வந்து சேர்ந்தது தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து வந்த நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கடைசியாக நடித்த பிரின்ஸ் திரைப்படம் மோசமான விமர்சனத்தை பெற்று சுமாரான வசூலை அள்ளியது. இதிலிருந்து தன்னை மாற்றிக் கொள்ள மடோன் அஸ்வினுடன்  இணைந்து “மாவீரன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகி வருகிறது.

படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதீ ஷங்கர், மிஷ்கின், யோகி பாபு, சுனில், கவுண்டமணி, சரிதா என பலர் நடிக்கின்றனர். படத்தின் இறுதி கட்டப்பட விடுப்பு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறதாம் இப்படி இருக்கின்ற நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்க்கிறார் படம் பண்ண உள்ளார்.

அவர்களில் ஒருவர் தான் ஏ.ஆர். முருகதாஸ் உடன் சிவகார்த்திகேயன் முதன்முறையாக கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெகு விரைவிலேயே வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏ ஆர் முருகதாஸ் சொன்ன கதை சிவகார்த்திகேயன் அது ரொம்ப பிடித்து போய் உள்ளதால்..

தனது சம்பளத்தை அவர் குறைத்துக் கொண்டு இந்த படத்தில் நடிக்க ஆர்வம் காட்டுகிறாராம்.. அதன்படி வழக்கமாக வாங்கும் சம்பளத்திலிருந்து 5 கோடி ரூபாய் சிவகார்த்திகேயன் குறைத்துக் கொண்டு இந்த படத்தில் நடிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது. இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.