ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா அயலான்.. வெளிவந்த ட்விட்டர் விமர்சனம்

Ayalaan Twitter Review: பொங்கல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் நடிப்பில் அயலான் திரைப்படம் இன்று திரையரங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில் இப்படத்தினை பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மாவீரன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு ரவிக்குமார் இயக்கத்தில் உருவான அயலான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்புகள் சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட நிலையில் தொடர்ந்து பிரச்சனைகளால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

தனுஷின் கேப்டன் மில்லர் திரையில் மிரட்டி விட்டதா.? இல்லையா.? இதோ விமர்சனம்…

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் வெற்றிக்காக சிவகார்த்திகேயன் எதிர்பார்த்து வருகிறார். மேலும் படத்திற்காக கடன் வாங்கி இருக்கும் நிலையில் இப்படத்தின் வெற்றியினால் மட்டுமே அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் வெளிவர முடியும். அயலான் படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், கருணாகரன், யோகி பாபு போன்றவர்கள் இணைந்து நடிக்க இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

பொதுவாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் குடும்பத்துடன் பார்க்கும் படங்களாக தான் அமைகிறது. அப்படித்தான் அயலான் திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்களின் வரை அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதன்படி தனது மகனுடன் தியேட்டருக்கு போன தந்தை என் மகன் தான் அயலான் படத்தை மிகவும் என்ஜாய் செய்து பார்த்தான் அவன் முதன்முறையாக சிரித்து மகிழ்ந்த முதல் படம் என பதிவிட்டுள்ளார்.

அஜித் அப்படி பண்ணுவாருனு யாருமே எதிர்பார்க்கல.. மொத்த யூனிட்டுமே பயந்துச்சு – ரகசியத்தை உடைக்கும் பிரியங்கா

மற்றொருவர் பொங்கல் ரிலீஸ் படங்களில் கண்டிப்பாக அயலான் தான் வெற்றி படம் எனவும் மேலும் சிவகார்த்திகேயனை மட்டுமல்லாமல் அதில் இயக்குனர் ரவிக்குமாரையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.