மிரட்டலாக வெளியானது சிவகார்த்திகேயனின் அயலான் ட்ரைலர்.!

Ayalaan Movie Trailer: சிவகார்த்திகேயன், ராகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட முன்னணி பிரபலங்களின் கூட்டணியில் உருவாகியிருக்கும் அயலான் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ்சாக உள்ளது. இந்த படம் கடந்த நான்கு ஆண்டுகளாக உருவாகி வந்த நிலையில் தீபாவளிக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் சில பிரச்சனைகளால் பொங்கல் பண்டிகையை ஒட்டி இப்படம் ரிலீஸ் ஆகிறது. அப்படி இப்படத்தின் ப்ரோமோஷன்களை படக் குழுவினர்கள் மிகப்பெரிய அளவில் செய்து வரும் நிலையில் இசை வெளியீட்டு விழாவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனை அடுத்து தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

அச்சம் என்பது இல்லையே.. ஹாலிவுட் தரத்தில் மிரட்டும் அருண் விஜயின் மிஷன் சாப்டர்-1 டிரைலர்.!

ஏலியனை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படம் சயின்ஸ் செக்சன் படமாக உருவாக்கியுள்ளது. இப்படத்தின் சூட்டிங் 85 நாட்களை நிறைவு செய்ததாகவும் ஆனால் சிஜி வேலைகள் எடுக்க அதிக நாட்கள் ஆனதாக இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார்.

அதன்படி இப்படத்தில் சிஜி வேலைகள் ஹாலிவுட் தரத்தில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் அயலான் படத்தினை இயக்குனர் ரவிக்குமார் இயக்கியுள்ளார். கண்டிப்பாக குழந்தைகள் முதல் குடும்பத்தினர்கள் அனைவரும் சேர்ந்து பார்க்கும் என்டர்டைன்மெண்ட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ட்ரைலரின் தொடக்கத்தில் இந்த மண்ணு புழு பூச்சிங்க சேர்த்தது என அப்பா சொல்வதை எப்பொழுதுமே நம்புறேன் அம்மா என சிவகார்த்திகேயன் குரல் கூற இதற்கு மற்றொருவர் புழு பூச்சிக்கெல்லாம் பாவம் புண்ணியம் பார்த்தால் எல்லாம் பண்ண முடியுமா என தொடங்குகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்