சிட்டியை மிரட்டும் மீனா.. சத்யாவை வைத்து முத்து மீனாவை பிரிக்க பார்க்கும் சிட்டி.. பரபரப்பின் உச்சத்தில் சிறகடிக்க ஆசை..

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து ஆட்டோவில் ரோகினியை  அழைத்துச் செல்வதால் முத்து காரை விற்று விடுவது ரோகினிக்கு தெரிய வர இதை வைத்து எப்படியாவது முத்துவை வீட்டில் மாட்டி விட வேண்டும் என அனைவரிடமும் ரோகிணி கூறிவிடுகிறார் உடனே முத்துவை உட்கார வைத்து விஜயா இந்த வீட்டை அடமானம் வைத்து தானே உங்களுக்கு காசு கொடுத்தாங்க காரை வித்த காசை கொண்டு வந்து வீட்ல தான குடுக்கணும் என பேசுகிறார்.

ஆனால் முத்து பேசாம அமைதியாக இருக்க இன்னும் வார்த்தைக்கு வார்த்தை பேச உடனே முத்து மனோஜ் 27 லட்சத்தை தூக்கிட்டு ஓடுனானே அதை கொடுக்க சொல்லு நானும் கொடுக்கிறேன் என பேசுகிறார் இதனால் அனைவரும் வாயை மூடி கொள்கிறார்கள் இந்த நிலையில் புதிய ப்ரோமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் மீனா நேரடியாக கார் செட்டுக்கு வருகிறார் அப்பொழுது எங்கள் வீட்டுக்காரர் ஆட்டோ தான் ஓட்றாரு எனக்கு நல்லாவே தெரியும் கார் என்ன ஆச்சு என கேட்க.

வசமாக சிக்கிய முத்து.. குடும்பத்தாரிடம் போட்டுக் கொடுத்து எச்ச வேலை பார்த்த ரோகினி..! மொத்த குடும்பத்திற்கும் பதிலடி கொடுத்த முத்து..

அதற்கு செல்வம் நாங்க வாங்குன கடனை உடனடியாக சிட்டி கட்ட சொன்னான் அதுக்காக முத்து காரை வித்துட்டான் அந்தக் காசை எல்லாத்தையும் சிட்டி கிட்ட கொடுத்துட்டான் என பேசுகிறார் உடனே அவனை நான் சும்மா விட மாட்டேன் என மீனா நேரடியாக சிட்டி ஆபீஸ் இருக்கு செல்கிறார். அங்கு சென்று சிட்டி இடம் ஏ சிட்டி தேவ இல்லாம என் புருஷன் வழியில்  குறுக்கிட்ட அவ்வளவுதான் நான் சும்மா இருக்க மாட்டேன் எனக் கூறுகிறார்.

உடனே தன்னுடைய அடியாட்களை கூப்பிட்டு இனிமே இந்த மீனாவும் முத்துவும் ஒண்ணாவே இருக்கக்கூடாது எனக் கூற அதற்கு அடியாட்கள் நாம என்ன செய்ய முடியும் என பேசுகிறார்கள் உடனே சிட்டி அதான் சத்தியா நம்ம கிட்ட இருக்கான்ல அவனை வச்சு செஞ்சிடலாம் என பேசுகிறார்கள் இந்த நிலையில் வீட்டில் இருக்கும் முத்து விடம் மீனா சென்று காரை வித்ததை என்கிட்ட சொல்ல வேண்டியது தானே என பேசுகிறார் இத்துடன் இன்றைய ப்ரோமோ முடிகிறது..

சினிமாவில் காணாமல் போன ஸ்ரீகாந்த் இத்தனை திரைப்படங்களை தவற விட்டுள்ளாரா.! அட ஒவ்வொரு திரைப்படமும் மரண ஹிட் ஆச்செ

Exit mobile version