பார்க்கில் குத்தாட்டம் போட்ட மனோஜ்.. வீடியோ எடுத்து குடும்பத்தினருக்கு காட்டிய முத்து – சிறக்கடிக்க ஆசை

Siragadikka Aasai today episode january 08 to 13  : சிறகடிக்க ஆசை சீரியலில் கடந்த வாரத்தில் முத்து யாருக்கும் தெரியாமல் பூக்கடை ஒன்றை ரெடி செய்து மீனா மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவரையும் வெளியே வர வைத்து சப்ரைஸ் கொடுக்கிறார். இதைப் பார்த்த  மீனா ரொம்ப சந்தோஷமாக உள்ளார். ஆனால் குடும்பத்தில் இருக்கும் மனோஜ், ரோகினி, விஜயா போன்றவர்களுக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை.

மீனாவை அவ்வபொழுது கலாய்த்து வந்தனர் ஆனால் சரியான நேரத்தில் முத்து வந்து அனைவருக்கும் டோஸ் கொடுத்து மீனாவை பாதுகாத்து வந்தார் மேலும் உனக்கு பக்க பலமாக நான் இருக்கிறேன் என சொல்ல நீங்க என் கூட இருந்தா போதும் நான் எவ்வளவு வேணாலும் சாதிப்பேன் மீனா நான் சொல்கிறார்.

மேல இருக்குறவன் கீழ வந்துதான் ஆகணும்.. சன் டிவி சீரியலை பின்னுகுத்தள்ளி முன்னேறும் விஜய் டிவி.. இதோ TRP லிஸ்ட்

இந்த பூக்கடையை இருப்பதை மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்த அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுக்கிறார்கள் இந்த நிலையில் இன்றைய ப்ரோமோ வெளியாகி உள்ளது அதில் முத்து தெருவில் இருக்கும் கடை மற்றும் பார்க் போன்ற இடங்களில் இருக்கும் ஆட்களிடம் நாங்கள் பூக்கடை ஒன்றை ஆரம்பித்திருக்கிறோம்..

உங்களுக்கு ஏதாவது வேண்டுமென்றால் சொல்லுங்கள் செய்கிறோம் என நோட்டீசை கொடுத்துக் கொண்டே வருகிறார் எதேர்ச்சியாக பார்க்கில் மனோஜ் இருப்பதை முத்து பார்த்து விடுகிறார் அதன் பிறகு மனோஜ் என்ன செய்கிறார் என்பதை ஒரு வீடியோவாக எடுத்து அதை வீட்டில் போட்டு காண்பிக்கிறார்.

தேடிவந்த சூப்பர் ஹிட் கதையை தவறவிட்ட ரஜினி, விஜயகாந்த்.. கடைசியில் யார் நடித்த தெரியுமா.?

இதைப் பார்த்த மொத்த குடும்பமும் அதிர்ச்சி ஆகிறது குறிப்பாக ரோகினிக்கு ஒண்ணுமே சொல்ல முடியவில்லை, ஒரு கட்டத்தில் ஸ்ருதி ரோகினி இடம் என்ன மனோஜ் இப்படி பண்றாரு என சொல்ல ரோகினி தலைகுனிகிறார்.

பிறகு மனோஜ் வீட்டிற்கு வந்து இன்னைக்கு கார் ஷோரூமுக்கு விஜய் வந்தார் என கூற.. டேய் இந்த வீடியோவை பாரு என முத்து சொல்லுகிறார் இதை பார்த்து மனோஜ் அதிர்ச்சியில் உட்கார்ந்து இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் அடுத்த வாரம் தரமான சம்பவம் இருக்கு என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.