உண்மையை சொன்ன மீனா.. விஜயாவை பார்த்து சிரித்த குடும்பத்தினர் – சிறக்கடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka Aasai today episode December 12 : இன்றைய எபிசோடில் முத்து தூக்கம் வராமல் மொட்டை மாடியில் சுத்தி கொண்டு இருக்கிறார். கீழே வந்து மீனா தூக்கம் வரல வா மேல போகலாம் என சொல்லுகிறார் ரெண்டு பேரும் மேல போய் ஜாலியாக பேசுகின்றனர்.

விஜயா காலையில் மீனா கிட்ட நல்லா டீ போடு உங்க வீட்ல போடுற மாதிரி போடாத வீட்டுக்கு வந்த புது மருமகளுக்கு கொடுக்கணும் என சொல்லுகிறார்  மீனா டீ போட்டு  கொடுக்கிறார் விஜயா எடுத்து செல்கிறார். ரவி சேலையை மடித்துக் கொண்டிருக்கிறார் இதை பார்த்த விஜயா நீ ஏன்டா சேலையை மடிக்கிற ஸ்ருதி எங்க என கேட்க..

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோடியில் நன்கடை கொடுத்த சன் டிவி.! எத்தனை கோடி தெரியுமா.?

அவ வேலைக்கு போயிட்டா  என்று சொல்ல.. வீட்டுல ஒரு மாமியார் நான் இருக்கேன் என்கிட்ட சொல்லாம அவ எப்படி போகலாம் என்ன சத்தம் போடுகிறார். பிறகு அண்ணாமலை  உட்கார்ந்து கொண்டிருக்கிறார் அங்கு வந்து ஸ்ருதி சொல்லாமலே போயிட்டா என என சொல்லுகிறார்.

ரோகினி மனோஜ் இருவரும் எழுந்து அங்கு வருகின்றனர். விஜயா மனசுக்குள்  ஸ்ருதி சொல்லாம போயிட்டா இதே மாதிரி நடந்தா இந்த ரெண்டு மருமகள் நம்மள மதிக்க மாட்டாங்க என புலம்புகிறார்.

படப்பிடிப்பிலேயே பிரபல நடிகையை அழ வைத்த ரகுவரன்.! ஓங்கி அறைந்ததால் வந்த வினை… என்னன்னு தெரிஞ்சா உங்களுக்கே கண்ணீர் வரும்…

ஆனால் மற்றவர்கள் முன்னாடி ஸ்ருதி என்கிட்ட சொல்லிட்டு தான் போனா என சொல்ல அந்த சமயம் பார்த்து மீனா வந்து ஸ்ருதியை நான் காலையில பார்த்தேன் அவங்க  அத்தை கிட்ட சொல்லல நீங்க சொல்லிடுங்கன்னு சொன்னாங்க என சொல்ல அங்கு இருப்பவர்கள் எல்லாம் விஜயாவை ஒரு மாதிரியாக பார்க்கின்றனர்.

விஜயா உடனே சமாளிக்கிறார். மீனா கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்க முத்து அங்கு வர மீனா டீ குடிங்க என்ன சொல்ல முத்து வேணாம் எனக்கு லேட்டாகிடுச்சு நான் குளிக்க போறேன் என்று சொல்கிறார்.  கீழ பாத்ரூம்ல போய் குளிங்க..

ரவி – ஸ்ருதி ரூமுக்கு போக வேண்டாம் என ரெண்டு மூணு நாளைக்கு அங்க போக வேணாம்  அத்தை சொல்லிட்டாங்க என்று மீனா சொல்ல உடனே முத்து  ஸ்ருதி ரவி இருந்த ரூமுக்கு போய் ரவி பொட்டி படுக்கையெல்லாம் எடுத்து வெளியே தள்ளிவிட்டு கதவை சாத்தி விடுகிறார்.

பிறகு விஜயா எல்லோரையும் சாப்பிட கூப்பிடுகிறார். எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்க கடைசியாக முத்து வருகிறார். தனியா போய்  சாப்பிடுகிறார். மனோஜ் முத்துவை பார்த்து என்ன இவன் கார் டிரைவர் வேலைக்கு தான் போக போறோன்..

இவ்வளவு அவசர அவசரமா சாப்பிடுறான் என சொல்ல ரோகினி நீங்க அவர விட ஒரு பெரிய வேலையில இருக்கீங்க உங்கள எத்தன பேரு பாக்க வருவாங்க என சொல்ல விஜயா மனோஜை பார்த்து ஒரு லுக்கு விடுகிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.