ரவி ஸ்ருதி காதலை மிஞ்சிய அண்ணாமலை விஜயா காதல்.. ஹலோ மேடம் உங்களுக்கு 20 வயசு இல்ல 60 வயசு மறந்துடாதிங்க…

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் கிச்சனில் முத்து மீனாவிடம் எதற்காக அப்பாவிடம் சொன்ன என கேட்க எங்க அப்பா இறந்துட்டாரு அவர்கிட்ட சொல்ல முடியல அதனால சொன்னேன் எனக் கூற  இதனால் முத்து வருத்தம் அடைகிறார்.

அடுத்த காட்சியில் விஜயா தன்னுடைய தோழிக்கு கால் செய்து முத்துவுக்கும் மீனாவுக்கும் செம சண்டை அந்த குடிகாரன் கண்டிப்பாக இவ்வள மிதிக்க போறான் இவளும் ஓடிட போறா அதுக்கப்புறம் இவங்க தொல்லையே இருக்காது என சந்தோஷப்படுகிறார் ஆனால் அவர்களின் தோழி அவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டுது அவ்வளவு சந்தோஷமா உனக்கு என பேசுகிறார்.

இப்படி மீனா மற்றும் முத்துவை கழுவி கழுவி விஜயா ஊதுகிறார் அதனை அண்ணாமலை கேட்டுக் கொண்டிருக்கிறார் உடனே நீ இப்ப சொன்ன இல்ல நானும் உன்ன பத்தி ஒருத்தர்ட்ட பேச போறேன் என கூற நான் சும்மா என் பிரண்டு கிட்ட தானே சொன்னேன் என்ன பேசுகிறார்.

படிக்கிற வயதிலேயே கிரிக்கெட் வீரர் மீது ஆசைப்பட்ட பூங்குழலி.. பலருக்கும் தெரியாத தகவல்

அடுத்த காட்சியில் சிட்டி கார் செட்டுக்கு வந்து அனைவரிடமும் மொத்த பணத்தையும் எடுத்து வைக்க வேண்டும் என கூறுகிறார்கள் அது மட்டும் இல்லாமல் முத்து என்ன அடிக்கும்போது எல்லாம் வேடிக்கை பார்த்தீர்களா இப்ப பணத்தை ஒழுங்கா உடனடியா கட்டுங்க என பேசுகிறார் அதுமட்டுமில்லாமல் இன்னும் மூணு நாள் தான் உங்களுக்கு டைம் இல்லனா காரை எடுத்து விடுவேன் என பேசிவிட்டு செல்கிறார்.

மேலும் ரவி சுருதி இருவரும் ரூமில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது இன்னைக்கு என்ன ஸ்பெஷல் டே என்று தெரியுமா என ஸ்ருதி ரவியிடம் கேட்க இன்னைக்கு ஒன்னும் கிடையாது என பேசுகிறார் இன்னைக்கு தான் முதல் முதலா நம்ம சந்திச்சுகிட்ட நாள் என கூறுகிறார். இதெல்லாம் போய் ஞாபகம் வச்சுக்க முடியுமா என பேச உடனே அண்ணாமலை இடம் அழைத்துச் சென்று முதல் முதலில் ஆண்டியை எப்ப பார்த்தீங்க என கேட்கிறார் அப்பொழுது அண்ணாமலை மிகவும் தெளிவாக நேரத்துடன் என்ன கலர் புடவை என அனைத்தையும் கூறுகிறார்.

மேகனாவின் மொபைல் தமிழிடம் சிக்கியது.. அடுத்த ஆதாரத்தைக் காட்டி அர்ஜுனை நடுநடுங்க வைத்த தமிழ்..

அதே போல் அடுத்ததாக விஜயாவிடம் சென்று மாமாவை எப்ப பார்த்தீர்கள் என கேட்க அதை ஏன் இப்ப கேக்குற ஏன் பார்த்தேன் என  தோணுது என பேச நீயும் ஆன்ட்டியும் ஒன்னு ஆனா மாமா வேற லெவல் என சுருதி கூறுகிறார் அது மட்டும் இல்லாமல் விஜயாவிடம் ஆன்ட்டி மாமா நீங்க எப்ப உங்கள பாத்தது என்ன கலர் டிரஸ் எல்லாத்தையும் கரெக்டா சொல்றாரு என பேசுகிறார்.

உடனே விஜயா அப்படியா சொன்னார் என அண்ணாமலையை ரொமான்ஸ் விடுகிறார் அடுத்ததாக ரோகிணி இடம் சென்று மனோஜை எப்பொழுது பார்த்தீர்கள் என கேட்க ரோகினியும் கரெக்டாக கூறுகிறார் அதே போல் அடுத்ததாக மனோஜிடம் சென்று ரோகிணியை எப்பொழுது பார்த்தீர்கள் என கேட்க மனோஜம் கரெக்டாக கூறிவிடுகிறார்.

பிறகு ஸ்ருதி ரவியை இழுத்து ரூமுக்கு செல்கிறார் அந்த சமயத்தில் விஜயா அண்ணாமலை இடம் ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் மிகவும் அருகில் உட்கார்ந்து டீ ஆத்தி கொடுத்து ஒருவரை ஒருவர் ரொமான்ஸ் ஆக இருக்கிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது