வீட்டுக்கு வந்த முதல் நாளே.. ஸ்ருதி செய்யும் வேலையை பார்த்து ஷாக்கான விஜயா – சிறகடிக்க ஆசை ப்ரோமோ

Siragadikka Aasai serial promo : சிறகடிக்க ஆசை சமீபத்திய எபிசோடுகளில் சுதா, விஜயாவிற்கு போன் பண்ணி ரவி, ஸ்ருதிய உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விடுகிறேன். ஆனா அந்த நேரத்துல முத்து இருக்கக் கூடாது என்று சொல்கிறார் பிறகு விஜயா ரவி ஸ்ருதி வீட்டிற்கு வருகிற நேரத்தில் முத்து வேலைக்கு அனுப்ப எவ்வளவோ ட்ரை பண்ணுகிறார்.

ஆனால் அந்த நேரத்தில் முத்து வயிறு கலக்குது என்று பாத்ரூமுக்கு போகிறார் பிறகு முத்து உடைய ரூம் கதவை தாப்பால் போட்டுவிட்டு ரவி, ஸ்ருதி, சுதாவிடம் உள்ள வாங்க என்று கூப்பிடுகிறார். இந்த நேரத்தில் சிறகடிக்க ஆசை அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது அதில் ரோகிணியும் மீனாவும் ரவி ஸ்ருதிக்கு ஆரத்தி எடுத்து உள்ளே வரவேற்கின்றனர்..

ரசிகர்களை கண்கலங்க வைத்த விஜயகாந்தின் தற்போதைய புகைப்படம்.. எப்படி இருக்கிறார் பாருங்கள்.!

பிறகு விஜயா முதல் முதலா இந்த வீட்டுக்கு வந்து இருக்க, விளக்கேத்து என்று  சொல்ல ஸ்ருதி தீப்பெட்டி பத்த வைக்கிறார் ஆனால் அந்த தீப்பெட்டி பத்த வில்லை. உடனே அண்ணாமலை ஒழுங்கா பத்தவை இது கூடவா தெரியாது என்று சொல்ல இதெல்லாம் நான் செஞ்சதில்லை, ஸ்மோக்கிங் பண்ற பழக்கமும் இல்லை என ஸ்ருதி சொல்கிறார்.

பிறகு விஜயா அந்த தீப்பெட்டியை வாங்கி பத்த வைத்து கொடுக்கிறார்.. அடுத்து ரவி ஸ்ருதிக்கு பால் பழத்தை கொடுத்து ரவி இடம் நீ முதல்ல சாப்பிட்டுட்டு உன் பொண்டாட்டிக்கு கொடு என்று சொல்ல.. ஸ்ருதி ஏன் பொண்டாட்டி முதல்ல சாப்பிட்டுட்டு தர கூடாதா என்று முதலில் ஸ்ருதி சாப்பிட்டுவிட்டு பிறகு இடம்  கொடுக்கிறார்.

எம்ஜிஆருக்கு பிறகு அஜித்துக்கு தான் அது மாதிரி நடந்திருக்கு.. ரஜினி, விஜய் ஓரம் போங்க…

பிறகு விஜயா ஸ்ருதி கிட்ட அதுதான் கிச்சன் என்று காண்பிக்க, அது ரவியோட டிபார்ட்மெண்ட் எனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்கிறார். அடுத்து இன்னைக்கு உங்களுக்கு சாந்தி முகூர்த்தம் ரெடி பண்ணி வச்சிருக்கேன் என்று சொல்ல அதான் எங்களுக்கு ஏற்கனவே முடிஞ்சிச்சே என்று ஸ்ருதி சொல்கிறார் இதைக் கேட்டு விஜயா ஷாக் ஆகும் ப்ரோமோ வெளியாகி இருக்கின்றன..