எம்ஜிஆருக்கு பிறகு அஜித்துக்கு தான் அது மாதிரி நடந்திருக்கு.. ரஜினி, விஜய் ஓரம் போங்க…

Ajith : நடிகர் அஜித்குமார் முதலில் பிரேம புத்தகம் என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து சின்ன சின்ன படங்களில் நடித்த வந்த அஜித்துக்கு காதல் கோட்டை, காதல் மன்னன் போன்ற படங்கள் அவரை தூக்கி விட்டதோடு மட்டுமல்லாமல் பெண் ரசிகர்களையும் அவருக்கு உருவாக்கி கொடுத்தது.

அடுத்து அமர்க்களம், தீனா, அட்டகாசம் என அடுத்தடுத்த ஆக்சன் படங்களை கொடுத்து ரசிகர்களையும் அதிகரித்துக் கொண்டார். இப்படிப்பட்ட அஜித் சினிமாவையும் தாண்டி தன்னை தேடி வரும் சினிமா பிரபலங்களுக்கும் சரி ஆள் தெரியாத புதிய முகங்களுக்கும் சரி பல உதவிகளை செய்து இருக்கிறார்.

அஜித்துடன் போட்டி போட்ட மக்கள்செல்வன்.. 12 கிலோ குறைத்து இளமையாக மாறிய விஜய் சேதுபதி

அவர் அதை பெருமையாக கூறிக் கொள்ளவில்லை என்றாலும் அவருடன் பழகிய நடிகர், நடிகைகள் நேரில் பார்த்த சிலர் சம்பவங்களை நமக்கு தெரியப்படுத்தி தான் வருகின்றனர்.  சினிமாவில் ஆரம்பத்தில் பலருடன் கிசுகிசுக்கப்பட்டாலும் ஷாலினியை திருமணம் செய்து கொண்ட பிறகு நடிகைகளுடன் கிசுகிசுவில் சிக்காத நடிகராக அஜித் இருந்து வருகிறார்.

இதனாலேயே அஜித்தை பலருக்கும் பிடித்துப் போய் உள்ளது. இந்த நிலையில் எம்ஜிஆர் இருக்கும், அஜித்துக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதாக பலரும் சொல்லி கேள்விப்பட்டு வருகிறோம்.  எம்ஜிஆர் ரசிகர்கள் கூட அஜீத் ரசிகர்களாக மாறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்தவங்கள நம்ப நல்லா பாத்துகிட்டா அந்த தெய்வம் நம்பள நல்லா பாத்துக்கும்.. நடிகை அபிநயா “அஜித்தை” பற்றி சொன்ன சுவாரஸ்ய தகவல்

இந்த நிலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவி திரையரங்கில்   அஜித் நடிப்பில் உருவான சிட்டிசன் திரைப்படம் அங்கு  திரையிடப்பட்டது சிட்டிசன் படத்தில் அஜித் பல வேடங்களில் நடித்திருந்ததால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது.

இந்த படம் தேவி தியேட்டர் டிக்கெட் முன்பதிவு செய்ய நீண்ட வரிசையில் நின்று உள்ளதாம். அதற்கு முன்பு எம்ஜிஆர் நடிப்பில் வெளியான உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு தான் இப்படி ஒரு நீண்ட வரிசை இருந்ததாக அந்த படத்தின் தியேட்டர் ஓனர் ஒரு முறை கூறியுள்ளாராம்.