பிஞ்சு வயதில் அம்மாவுக்காக தவியாய் தவித்த முத்து.! சோக கதையை சொல்லி விஜயாவையே கண்கலங்க வைத்த தருணம்.. அடி பாவி பச்ச புள்ளைய இப்படியா பண்ணுவ.?

siragadikka aasai : சிறகடிக்க ஆசை சீரியலில் சமீபத்திய எபிசோடில் பானை உடைக்கும் போட்டி நடைபெறுகிறது அதில் முதலில் விஜயாவின் மகன் மனோஜ் பானையை உடைக்க முயற்சி செய்ய அவரால் உடைக்க முடியவில்லை, அடுத்ததாக ரோகிணி உடைக்க முயற்சி செய்கிறார் அவராலும் முடியவில்லை, பிறகு ரவி பானையை உடைக்க முயற்சி செய்ய அவராலும் முடியவில்லை அடுத்ததாக ஸ்ருதி மீனா என அனைவரும் முயற்சி செய்து முடியாமல் தோற்றுவிடுகிறார்கள்.

கடைசியாக முத்து பானையை உடைத்து விடுகிறார் முத்துவை தூக்கி கொண்டாடுகிறார்கள் மற்ற இரண்டு நபர்களும் உடனே இந்த வெற்றி நம்ம டீமுக்கு தான் நம்ப டீம் கேப்டனை தூக்கி கொண்டாடனும் என அம்மாவை தூக்கி கொண்டாடுகிறார்கள் இதனால் விஜயாவின் மனம் லேசாக இலகுகிறது.

பென்ஸ் காரை தொட்டதால் அடிக்க வந்த நபர்.. மனைவியிடம் கூறி அழுத மயில்சாமி.. பிறகு நடந்தது தான் தரமான சம்பவம்..

அடுத்த காட்சியில் டயர் போட்டி நடைபெறுகிறது டயர் போட்டியில் முத்து மற்றும் மீனா இருவரும் வெற்றி பெறுகிறார்கள் அதனால் இருவருக்கும் பாராட்டை தெரிவிக்கிறார்கள் பாட்டியும் கை கொடுத்து வாழ்த்துகிறார் விஜயாவையும் கை கொடுக்க சொல்லி கூறுகிறார்.

இந்த நிலையில் ஊருக்கு அனைவரும் கிளம்பலாம் என பேசிக் கொண்டிருக்கும் பொழுது இன்னொரு கேம் விளையாடலாமா என சுருதி கேட்கிறார் இந்த கேம் பேரு ட்ரூத் கேம் அதாவது உண்மையை சொல்ல வேண்டும் என பேசுகிறார்கள். இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது இந்த ப்ரோமோ வீடியோவில் பாட்டி முத்து உன் மனசுல என்ன இருக்கு என கேட்கிறார்.

நோயால் அவதிப்பட்ட சமந்தா.. படப்பிடிப்பில் நிற்க முடியாமல் மயங்கி விழுந்ததால் பரபரப்பு… பதறி அடித்து ஓடிய படக்குழு..

அப்பொழுது முத்து உங்களுக்கு ஞாபகம் இருக்கா இதே நாள் ஒரு பொங்கல் பண்டிகைல தான் என்ன அப்பாவும் அம்மாவும் இங்க விட்டுட்டு போனாங்க அப்பொழுது எனக்கு எப்படா அம்மா வருவாங்கன்னு எட்டி எட்டி பாப்பேன் அம்மா என் கூட இருந்தா அந்த சாமியே இருப்பதாக நினைப்பேன் என முத்து கண்கலங்கி கூறுகிறார் இதனை பார்த்துக் கொண்டிருக்க விஜயாவும் கண் கலங்குகிறார்.

முத்துவின் கண்ணீர் துளி குடும்பத்தில் உள்ள அனைவரையும் வருத்தப்பட வைத்துள்ளது முத்துவின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா என பலரும் பரிதாபமாக பார்க்கிறார்கள் இந்த ப்ரோமோ வீடியோ ரசிகர் மத்தியில் வைரலாகி வருகிறது.